உலகையே கொன்று குவித்து மண்ணை அள்ளிப்போட்ட சீனாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது தமிழக இந்திய கம்யூனிஸ்ட் மார்சிஸ்ட் கட்சி. 
உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு கொடும் வைரஸை அறிவியலில் வளர்ந்து வரும் அதிநவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அந்த வைரஸ் பிறந்த இடத்திலேயே சுக்குநூறாய் உடைத்துத் தள்ளியிருக்கிறது சீனா என தமிழக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சீனாவை வானளாவ புகழ்ந்திருக்கிறது. காரணம் சீனா ஒரு கம்யூனிஸ சர்வாதிகார நாடு.

இதற்கு கருத்து தெரிவித்துள்ள பலரும் , ‘பல லட்சம் மக்களை ஆபத்தில் தள்ளிய சீனாவுக்கு பாராட்டு சொல்லும் இந்திய கம்யூனிஸ்டுகள் கொரோனாவை விட கொடியவர்கள்.சீனாதான் இதை தடுக்க துப்பில்லாமல் உலகம் முழுவதும் பரப்பி பல இன்னுயிர்களை கொன்று கொண்டிருக்கிறது. கண்டிக்க துப்பில்லாமல் துதி பாடிகிறீர்களே. மனித குலத்தின் மாபெரும் கொடூர அரக்கர்கள் நீங்களே. உண்டியல் பிச்சைகார்ர்களுக்கு மனித உயிர் பற்றி என்ன தெரியும். 

மனித இனத்தையே உயிர்பயத்தில் அலற விட்டிருக்கும். கொரோனா வைரஸை பிறப்பெடுக்க வைத்ததற்காய், உலக மக்களிடம் மன்னிப்பு கேட்குமா சீனா?" உலக மக்கள் தத்தளிக்கும் இத்தருணத்தில், கொரோனா வைரசை சுக்குநூறாக்கி உடைத்து விட்டோம்" என, சீன பெருமை பேசுவதுதான் கம்யூனிசமா? என பலரும் கடுமையாக எதிர் கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர். 

முதலில் சீனா இழைத்த தவறு அந்த நாட்டில் என்ன நடைபெற்றது? நடைபெறுகின்றது என்கிற விவகாரங்களை அந்த நாட்டில் இருக்கின்ற ஊடகங்கள் இன்றைய உலக நாட்டு கூடங்களுக்கு பரிமாறிக் கொள்ள முடியாத அளவிற்கு ஊடகங்களுடைய கழுத்தை சீனா இரும்புக்கரம் கொண்டு நெரித்தது. இதனால், சரியான தகவல்கள் உலகநாடுகளுக்கு கிடைக்காமல் போய்விட்டது.

இது அரசியல், சுகாதாரம், உயிர் மீதான் விளையாட்டு. இதை தடுத்து இருக்க கூடாது. இரண்டாவதாக சீனாவில் செப்டம்பர் மாதமே கொரோனா கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. அதை சீனாவிற்கு எடுத்துரைத்த மருத்துவர்கள் அடக்கி வைக்கப் பட்டனர். அவருடைய தகவல் வெளியே தெரிய விடாமல் சீனா தடுத்தது. இதனால், இந்த விவகாரத்தை முற்றும் முழுவதுமாக சீனா இரும்புதிரை கொண்டு மறைத்து விட்டது. ஆனால், இதனுடைய பாரதூர தன்மையும் சீனாவில் நடைபெற்று கொண்டு இருக்கின்ற நிகழ்வுகளும் உலக நாடுகளுக்கு தெரியாமல் போய்விட்டன.

 இதனால், உலக மக்களுக்கு சீனாவில் என்ன நடைபெறுகிறது? நோய் தொற்று வரப்போகிறது என்பது தெரியாமல் போய்விட்டது. உதாரணமாக சுமத்ராவில் சுனாமி ஏற்பட்டு இலங்கையில் முதல் இந்தியா வரை பாதித்த பொழுது சுனாமி சுமத்ரா தீவில் ஏற்பட்டுவிட்டது என்பதை சரியாக கண்டுபிடித்து இருந்தால் மக்கள் தயாராகி தங்களை காப்பாற்றிக் கொண்டிருப்பார்கள். 

 

அதைப்போலத்தான் சீனாவில் ஏற்பட்ட இந்த கொரோனா  பாதிப்பை சரியாக, உண்மையாக சீனா ஊடகங்கள் வழியாக தெரியப்படுத்தி இருந்தால் இருட்டடிப்பு செய்யாமல் உண்மையான விஷயங்களை எடுத்து வைத்திருந்தால் இன்று உலகம் முழுவதும் இவ்வளவு பெரிய தாக்கம் ஏற்பட்டிருக்காது என பலரும் குற்றம்சாட்டி வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி சீனாவுக்கு பல்லாக்கு தூக்கி இருப்பது எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.