MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழகத்தில் இந்த 3 தொகுதியில் ஜெயிச்சா கோட்டை கன்ஃபார்ம்..! 60 வருட செண்டிமெண்ட்..!

தமிழகத்தில் இந்த 3 தொகுதியில் ஜெயிச்சா கோட்டை கன்ஃபார்ம்..! 60 வருட செண்டிமெண்ட்..!

தமிழ்நாட்டில் சில தொகுதிகளில் எந்த கட்சி வெற்றி பெறுகிறதோ இல்லை எந்த கட்சியோட கூட்டணி வெற்றி பெறுகிறதோ அந்த கட்சியை சேர்ந்தவர்கள் தான் ஆட்சியை பிடிப்பார்கள் என்கிற வரலாறுகளும் உண்டு.

2 Min read
Author : Thiraviya raj
Published : Feb 18 2026, 12:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அரசியல் செண்டிமெண்ட்
Image Credit : Asianet News

அரசியல் செண்டிமெண்ட்

தேர்தல் என்றாலே நிறைய வியூகங்கள், திட்டங்கள் அதை எல்லாம் தாண்டி நிறைய சென்டிமென்ட் இருக்கிறது. குறிப்பிட்ட நாளில் விருப்ப மனு பெறுவது, இந்த நாளில் திரும்ப தாக்கல் செய்து எனட் தொடங்கி இந்தக் கோயிலில் சாமி கும்பிடுவது, இந்த ஊரில் இருந்து பிரச்சாரத்தை ஆரம்பிப்பது உண்டு. அதையும் தாண்டி பெரிய தலைவர்கள் மதம் சார்ந்த நம்பிக்கைகள் இல்லாவிட்டாலும் கூட மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சைதாப்பேட்டையில் பிரச்சாரத்தை ஆரம்பித்து, திருவாரூரில் முடிப்பது. இல்லையென்றால் திருவாரூரில் ஆரம்பித்து சைதாப்பேட்டையில் முடிப்பது என செண்டிமெண்ட் பார்ப்பார்.

அதேபோல மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும்கூட நிறைய சென்டிமென்ட் உண்டு. குறிப்பாக வேட்பாளராக போட்டியிட போறகிறவர்கள், அமைச்சர்களாக வரப்போகிறவர்களின் ஜாதகங்களை வாங்கி அவர்களுக்கு கட்டங்கள் சரியாக இருக்கிறதா? அவர்களுக்கு பொறுப்புகளையோ இல்லை வேட்பாளராக அறிவித்தால் ஒர்கவுட் ஆகுமா? அதுபோன்ற விஷயங்கள் எல்லாம் பார்ப்பது உண்டு. இப்படி ஒவ்வொரு தலைவர்களுக்கும் வந்து ஒவ்வொரு சென்டிமென்ட் அப்படிங்கிறது ரொம்பவே இருக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஆட்சியை பிடித்த வரலாறு
Image Credit : our own

ஆட்சியை பிடித்த வரலாறு

தமிழ்நாட்டில் சில தொகுதிகளில் எந்த கட்சி வெற்றி பெறுகிறதோ இல்லை எந்த கட்சியோட கூட்டணி வெற்றி பெறுகிறதோ அந்த கட்சியை சேர்ந்தவர்கள் தான் ஆட்சியை பிடிப்பார்கள் என்கிற வரலாறுகளும் உண்டு. அப்படியான செண்டிமெண்ட்டை 1967 லிருந்து 2016 வரை எடுத்துக் கொண்டோமானால் தமிழகத்தில் ஒரு எட்டு தொகுதிகள் அதுபோன்ற ஒரு வரலாறுக்கு சொந்தமுள்ள தொகுதியாக இருக்கிறது. ஆரணி, சங்ககிரி, மேட்டூர், வீரபாண்டி, மொடக்குறிச்சி, நாமக்கல், ராமநாதபுரம், வேடசந்தூர் என எட்டு தொகுதிகளில் எந்த கட்சியை வெற்றி பெறுகிறதோ, இல்லை எந்த கட்சியோட கூட்டணிகள் வெற்றி பெற்றிருக்கிறார்களோ அந்த கட்சிதான் ஆட்சியையும் பிடித்திருக்கிறது.

34
மாறிய செண்டிமெண்ட்
Image Credit : our own

மாறிய செண்டிமெண்ட்

2016 தேர்தலில் இந்த பட்டியலில் இருந்த ஒரு ஐந்து தொகுதிகளோட முடிவுகள் மாறி வந்திருக்கிறது. அந்த வகையில் 2021 தேர்தலில் வந்து ஆரணியில் போட்டியிட்ட முன்னால் அமைச்சர் ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். ஆனால் திமுக ஆட்சியை பிடித்தது. சங்ககிரி தொகுதியில் அதிமுகவை சேர்ந்த சுந்தர்ராஜன் வெற்றி பெற்றிருந்தார். அதேபோல மேட்டூர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாமகவைச் சேர்ந்த சதாசிவம் வெற்றி பெற்றிருந்தார். அதேபோல வீரபாண்டி தொகுதியில் ராஜா முத்து வெற்றி பெற்றிருந்தார். அதிமுக கூட்டணியில் மொடக்குறிச்சியில் பாஜகவை சேர்ந்த சரஸ்வதி வெற்றி பெற்று இருந்தார்.

44
ஆட்சியை அமைக்கும் 3 தொகுதிகள்
Image Credit : Asianet News

ஆட்சியை அமைக்கும் 3 தொகுதிகள்

மற்ற 3 தொகுதிகளான ராமநாதபுரம், நாமக்கல், வேடச்சந்தூர் ஆகிய மூன்று தொகுதிகளில் எந்த கட்சி வெற்றி பெற்றதோ அந்த கட்சிதான் ஆட்சி அமைத்துள்ளது. ராமநாதபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். அதேபோல நாமக்கல் தொகுதியில் ராமலிங்கம் வெற்றி பெற்றிருக்கிறார். அடுத்து வேடசந்தூர் காந்தி ராஜன் வெற்றி பெறார். 1967 லிருந்து 2016 வரைக்கும் 8 தொகுதிகள் இந்த பட்டியலில் இருந்தது. 2021 தேர்தலில் ஐந்து தொகுதிகள் அந்தப் பட்டியலை விட்டுப் போய் மூன்று தொகுதிகள் மட்டும் அந்த பட்டியலில் மீதம் இருக்கிறது.

About the Author

TR
Thiraviya raj
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ration Card : ரேஷன் கார்டு அப்டேட் பண்ண சூப்பர் வாய்ப்பு! சென்னையில் நடக்கும் சிறப்பு முகாம்!
Recommended image2
Now Playing
பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் - கோடம்பாக்கத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் அமைச்சர் பேச்சு!
Recommended image3
Now Playing
தூத்துக்குடி நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
Related Stories
Recommended image1
டி.ராஜேந்தர் எழுதிய பாடலை கேட்டு மெய்மறந்த கண்ணதாசன்.! கவிஞர் பாராட்டிய அந்த சூப்பர் ஹிட் பாட்டு எது தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved