இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் மற்றும் சீன ராணுவத்தினர் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக சீனா தகவல் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் சிந்து பகுதியில் உள்ள  தட்டா மாவட்டத்தில் போலார் விமானப்படைத் தளத்திற்கு  சீனா போர் விமானங்களையும், வீரர்களையும்  அனுப்பியுள்ளதாக கூறியுள்ளது. சீன ராணுவம் மற்றும் விமான படை போர் விமானங்கள் திங்கட்கிழமை பொலேரியை அடைந்துள்ளது. அதேநேரத்தில் பாகிஸ்தானின் ஷாஹீன் - 9  விமானமும் அப் பயிற்சியில்  ஈடுபட்டுள்ளது. 

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது, இந்நிலையில் இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனை ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தான், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை பன்மடங்கு அதிகரித்துள்ளது. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் இந்தியாவுக்கு எதிராக சீனா-பாகிஸ்தான்  கைகோர்த்து செயல்படத் தொடங்கியுள்ளன. அதே நேரத்தில் இவ்விரு நாடுகளையும் எதிர்கொள்ள இந்தியா தனது இராணுவ வலிமையை அதிகரித்து வருகிறது. இந்நிலையில்  சிந்து மாகாணத்தில் தாட்டா மாவட்டத்தில் பொலேரியில் உள்ள பாகிஸ்தான் விமானப்படை விமான நிலையத்திற்கு சீனா தனது போர் விமானத்துடன் ராணுவத் துருப்புகளை அனுப்பியுள்ளது, 

சீனாவின் ஹெவி லிப்ட் விமானம் ஒய்-20 இதில் இடம்பெற்றுள்ளது, மேலும் இருதரப்பு பயிற்சியின் நோக்கம் இரு படைகளின் உண்மையான போர்ப்பயிற்சியை மேம்படுத்துவது என சீன ராணுவம் கடந்த திங்களன்று கூறியுள்ளது. ஆனால் அதில் எத்தனை சீன வீரர்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற எண்ணிக்கையை அது தெரிவிக்கவில்லை, இந்த பயிற்சி டிசம்பர் இறுதி வரை நீடிக்கும் எனவும் சீனாவை சேர்ந்த 50  போர் விமானங்கள் 2019 ஷாஹீன் -9 போர்  விமானம் இப்பயிற்சியில் பங்கேற்றுள்ளன. பாகிஸ்தானின் இந்த விமானப்படைத்தளம் கராச்சியில் இருந்து வடகிழக்கு இந்தியாவின் குஜராத்  மாநிலத்தின் எல்லையாக அமைந்துள்ளது, கடந்த மே மாதத்தில் இருந்து லடாக்கில் எல்லை கோட்டு வரிசை தொடர்பான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பதட்டம் ஏற்பட்டுள்ள நிலையில் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இந்த பயிற்சி நடைபெற்று வருகிறது. 

இராணுவ மற்றும் இராஜதந்திர மட்டத்தில் பல இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இருந்தபோதிலும் இன்னும் மோதல் ஏற்படும் சூழல் உள்ளது. சீன இராணுவம் தனது போர் விமானங்களை லடாக் முதல் அருணாச்சல பிரதேசம் வரை எல்.ஐ.சி.யில் நிறுத்த முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானின் போலரி விமானப்படை தளம் 2017 இல் நிறுவப்பட்டது. போலாரி திட்டம் போர் முக்கியத்துவம் வாய்ந்தது என்று பாகிஸ்தான் விமானப்படை தலைவர் வர்ணித்துள்ளார். பாகிஸ்தான் விமானப்படைக்கு தரை மற்றும் கடல் நடவடிக்கைகளுக்கான திறனை அதிகரிப்பதில் இது பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடைசியாக ஷாஹீன் போர் பயிற்சி இந்தியாவை ஒட்டிய சின்ஜியாங் மாகாணத்திலும் நடந்தது குறிப்பிடதக்கது.