அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர் அடுத்த வாரம் இந்தியாவுக்கு வருகை தர உள்ளதாக அறிவித்துள்ளனர். 

மார்க் எஸ்பர் இதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் நிலையில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது சீன மற்றும் பாகிஸ்தானுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவுக்கு  சீனாவுக்கும் இடையே எல்லையில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பதற்றம் நீடித்து வருகிறது. அதே நேரத்தில் பாகிஸ்தான் சீனாவுடன் கைகோர்த்து கொண்டு இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.  இந்நிலையில் இந்தியா, சீனா- பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளையும் எதிர்கொள்ள ராணுவ ரீதியாக தயாராகி வருகிறது.  எனவே பிரான்ஸ் ரஷ்யா, உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்து வருவதுடன், பிரான்சிடமிருந்து ரஃபேல் போர் விமானங்களை அதிரடியாக இறக்குமதி செய்து சீனா பாகிஸ்தான்எச்சரித்துள்ளது. 

அதே நேரத்தில் எல்லை விவகாரத்தில் இந்தியாவுக்கு சாதகமாக கருத்து கூறி வரும் அமெரிக்கா, இந்தியாவுடன் அதிகம் நெருக்கம் கட்டி வருகிறது. அதேபோல் கொரோனா விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், ஆசிய கண்டத்தில் தனக்கு ஆதரவு நாடாக இந்தியாவை அமெரிக்கா பாவிக்கத் தொடங்கி உள்ளது . அதே நேரத்தில் சீனாவை எதிர்க்க இந்தியாவுடன் அமெரிக்கா அதிகம் நெருக்கம் பாராட்டி வருகிறது. இந்நிலையில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்காக அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் எஸ்பர் மற்றும் வெளியுறவுத் துறைச் செயலாளர் மைக் பாம்பியோ ஆகியோர் அடுத்த வாரம் இந்தியா வருகை தர உள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் இந்த நூற்றாண்டில் இந்தோ பசிபிக் பகுதியில் இந்தியா எங்களுக்கு சிறந்த பங்காளியாக இருந்து வருகிறது.  பழைய கூட்டணிகளை பலப்படுத்துவதற்கும், சீனா-ரஷ்யா போன்ற நாடுகளுக்கு எதிராக, உலகளாவிய வலையமைப்பை உருவாக்குவதற்கும் அமெரிக்கா எடுத்து வரும் பரந்துபட்ட ஒரு முயற்சியில் பகுதியாக தனது வருகை அமையும் என்றும் எஸ்பர் கூறியுள்ளார். 

அதேபோல இருநாடுகளுக்கும் இடையே உளவுத்துறை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை  பகிர்வது மற்றும்  பாதுகாப்பு விவகாரங்களில் இணைந்து செயல்படுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முடிவு  செய்வதற்கான பயணமாக இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவுக்கு எதிரான எல்லை விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக மார்க் எஸ்பர் கருத்து கூறி வருகிறார். மேலும் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றும் தகுதி வாய்ந்த மக்கள் நிறைந்த ஒரு  தகுதியான நாடு இந்தியா என்றும், அங்குள்ள மக்கள் இமயமலை எல்லையில் ஒவ்வொருநாளும் சீனர்களை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கின்றனர் என மார்க் எஸ்பர் கூறியுள்ளார். அடுத்த மாதம் இந்தியாவுடன் ராணுவப் பயிற்சியில் ஈடுபடப்போவதாகவும் ஆஸ்திரேலியா அறிக்கை  வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, ஜப்பான் ஆகிய இரு நாடுகளுமே அந்த பயிற்சியில் இடம்பெறவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த பயிற்சி வரும் நவம்பர் மாதம் அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் நடைபெற இருக்கிறது. 

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மத்திய அரசு, கடல்சார் பாதுகாப்பு விவகாரத்தில் மற்ற நாடுகளுடன் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது. மலபார் 2020 பயிற்சியில் ஆஸ்திரேலிய கடற்படை பங்கேற்கும், அதாவது இந்த பயிற்சியை இந்தியா மற்றும் அமெரிக்காவின் இருதரப்பு கடற்படை ஒத்துழைப்பின் கீழ் தொடங்கப்பட்டதாகும். 2018 ஆம் ஆண்டில் இந்த வருடாந்திர பயிற்சி பிலிப்பைன்ஸின் குவாட் கடற்கரையிலும் 2019 ஆம் ஆண்டில் ஜப்பான் கடற்கரையிலும் நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு இது வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலில் நடைபெறுமென மத்தியஅரசு அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.