Asianet News TamilAsianet News Tamil

ஓய்வு பெறுகிறார் இறையன்பு.! தலைமைசெயலாளர் பதவிக்கு போட்டியிடும் மூத்த அதிகாரிகள்.! முன்னனியில் யார் தெரியுமா?

தமிழக அரசின் தலைமைச்செயலாளர் இறையன்பு இம்மாதம் 28ந் தேதி முதல் விருப்ப ஓய்வில் செல்ல இருப்பதாகவும் அவரை தகவல் உரிமை ஆணைய தலைவராக நியமிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

Chief Secretary IraiAnbu retiring the selection of a new officer has begun
Author
First Published Feb 9, 2023, 10:41 AM IST

ஓய்வு பெறுகிறார் இறையன்பு

திமுக அரசு பதவியேற்றதும் தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும வகையில் தலைமைச்செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சனை மாற்றிவிட்டு இறையன்பை தலைமைசெயலாளராக நியமித்தார் முதலமைச்சர் ஸ்டாலின், அடுத்ததாக டிஜிபி பதவியில் இருந்த திரிபாதி ஓய்வு பெற்றதையடுத்து புதிய டிஜிபியாக சைலேந்திர பாபுவையும் நியமித்தார். இந்தநிலையில் இருவருக்கும் ஓய்வு பெறும் நாள் நெருங்கிவிட்டதால் புதிய மூத்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை தேடும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இருவருக்கும் பதவி நீட்டிப்பு கொடுக்கப்படும் என்ற தகவல் வெளியான நிலையில்,

எதிர்க்கட்சிகளை மதிக்காத அரசாக இருக்கிறது திமுக அரசு... ஜெயக்குமார் விளாசல்!!

Chief Secretary IraiAnbu retiring the selection of a new officer has begun

புதிய தலைமைசெயலாளர் யார்.?

அதிமுக ஆட்சி காலத்தில் தலைமைச்செயலாளர் மற்றும் டிஜிபிக்கு பதவி நீட்டிப்பு கொடுத்ததற்கு எதிர்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் அப்போது எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். எனவே தற்போதைக்கு பதவி நீட்டிப்பு கொடுக்க வாய்ப்பு இல்லையென்ற தகவல் வெளியாகியுள்ளது.எனவே தலைமைசெயலாளர் மாற்றப்பட இருப்பது உறுதியான நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களுக்கு ஆட்சியர்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் இடம்மாற்றம் செய்யப்பட்டனர். இந்தநிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டியுள்ளதால் தற்போதே தலைமைச்செயலாளர் மற்றும் டிஜிபியை தமக்கு ஆதரவாக இருப்பவர்களை தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

Chief Secretary IraiAnbu retiring the selection of a new officer has begun

போட்டியில் மூத்த அதிகாரிகள்

தற்போது கோட்டை தலைமை அதிகாரியின் பதவியை கைப்பற்ற இரண்டு அதிகாரிகள் ரேசில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அடுத்த தலைமைச்செயலாளராக முருகானந்தம்,  ஷிவ்தாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, விக்ரம் கபூர், கார்த்திகேயன், ஹன்ஸ்ராஜ் வர்மா, எஸ்.கே.பிரபாகர் ஆகியோர் பெயர்கள் அதிகமாக அடிபடுகின்றன. இருப்பினும் இப்போதைக்கு ஷிவ்தாஸ் மீனா அல்லது ஹன்ஸ்ராஜ்வர்மாவுக்கு  அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே  தலைமைச்செயலாளர் இறையன்பு இம்மாதம் 28ந் தேதியோடு விருப்ப ஓய்வில் செல்ல இருப்பதாகவும் அவரை தகவல் உரிமை ஆணைய தலைவராக நியமிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்

பேருந்தில் தொங்கி செல்லும் மாணவர்களுக்கு எச்சரிக்கை! டிரைவர், நடத்துநருக்கு புதிய உத்தரவிட்ட போக்குவரத்துதுறை

Follow Us:
Download App:
  • android
  • ios