எதிர்க்கட்சிகளை மதிக்காத அரசாக இருக்கிறது திமுக அரசு... ஜெயக்குமார் விளாசல்!!

எதிர்க்கட்சிகளை மதிக்காத அரசாக இந்த திமுக அரசு இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். 

dmk govt is a govt that does not respect the opposition parties says jayakumar

எதிர்க்கட்சிகளை மதிக்காத அரசாக இந்த திமுக அரசு இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். முன்னதாக மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் குறித்து திமுக எம்.பி. ஆ.ராசா அவதூறாக பேசினார். இதனை கண்டித்து பெருந்தலைவர் காமராஜர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துக்கொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆ.ராசாவுக்கு வாய்க்கொழுப்பு. ஊழலில் திளைத்த ராசா மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசி வருகிறார். அதை ஊக்கப்படுத்தும் விதமாக முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க: மக்களவையில் மத்திய அரசை விமர்சித்த கனிமொழி... அண்ணாமலை டிவிட்டரில் பதிலடி!!

நான் சர்வாதிகாரியாக மாறிவிடுவேன் என்று முதல்வர் ஸ்டாலின் சொன்னார். எதிர்க்கட்சிகளிடம் தான் தன்னுடைய  சர்வாதிகாரத்தை அவர் காட்டி வருகிறார். தனது கட்சிக்காரர்களிடம் அதை காட்டுவதே இல்லை. ஆட்சியை விமர்சனம் செய்தால் வழக்குகள் போடுவது, சிறையில் தள்ளுவது. இதைத்தான் அவர் செய்து கொண்டிருக்கிறார்.  பெருந்தலைவர் காமராஜர் விடுதலைப் போராட்ட வீரர். சிறப்பான ஆட்சியை கொடுத்தவர். அவரை கொச்சைப்படுத்துவது சரியா? இதையெல்லாம் பார்க்கும் போது முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லித்தான் ஆ.ராசா இப்படி பேசுகிறாரா என்கிற சந்தேகம் எழுகிறது.

இதையும் படிங்க: தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை... விஜயகாந்த் குற்றச்சாட்டு!!

எதிர்க்கட்சிகளை மதிக்காத ஒரு அரசாக இந்த திமுக அரசு இருக்கிறது. காமராஜர் குறித்து ஆ.ராசா அவதூறாக பேசியதற்கு காங்கிரஸ் கட்சியினர் எந்த கருத்தும் சொல்லாததற்கு காரணம் காங்கிரஸ் கட்சி ஜால்ரா கட்சி. திமுகவிற்கு பக்க வாத்தியமாக இருக்கிறது. சூடு சொரணை உள்ளவர்கள் பேசுவார்கள்.  அவர்களுக்கு அது இருப்பதே தெரியவில்லை. திமுக ஆட்சியின் அவல நிலையை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். எங்கள் ஆட்சியின் சாதனை மக்களுக்கு நன்றாக தெரியும் . அதை மனதில் வைத்து மக்கள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓட்டு போடுவார்கள் என்று தெரிவித்தார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios