நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த திட்டம் தீட்டும் எதிர்கட்சிகள்..! நாளை பீகாருக்கு பறக்கும் மு.க. ஸ்டாலின்
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு எதிராக நாடு முழுவதும் ஓற்றை அணியை ஏற்படுத்தும் வகையில், நாளை மறு தினம் பீகாரில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்தகொள்ளவுள்ளார். இதற்காக நாளை சென்னையில் இருந்து புறப்பட்டு பீகார் செல்கிறார்.
பீகாரில் எதிர்கட்சிகள் கூட்டம்
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலத்திற்கும் குறைவான நாட்களே இருப்பதால், தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியில் இருக்கும் பாஜகவை வீழ்த்த நாட்டில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றினைய திட்டம் தீட்டி வருகிறது. இதற்காக ஏற்கனவே பல முறை ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. அசுர பலத்தோடு இருக்கும் பாஜக தனித்து நின்று எதிர்த்தால் வீழ்த்த முடியாது என எதிர்கட்சிகள் தற்போது முடிவு செய்துள்ளன. எனவே மக்களவை தேர்தலில் பாஜக.,வுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் இறங்கியுள்ளார். அதன் அடுத்த கட்டமாக எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை பிஹார் தலைநகர் பாட்னாவில் ஜூன் 12-ம் தேதி நடத்த ஏற்கெனவே திட்டமிட்டிருந்தார்.
பாஜகவிற்கு எதிராக ஒரே அணி
ஆனால், இதற்கான தேதியை தள்ளிவைக்கும்படி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட சில கட்சிகள் வேண்டுகோள் விடுத்தன. இதன் காரணமாக தேதி மாற்றம் செய்யப்பட்டு ஜூன் 23 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, , டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முக்கிய தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற கூட்டங்களுக்கு பிரதிநிதிகளை அனுப்பாமல் கட்சி தலைவர்களே பங்கேற்க வேண்டும் என்று நிதிஷ் குமார் சமீபத்தில் வலியுறுத்தியிருந்தார்.
பீகார் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்
இந்த நிலையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சரமான மு க ஸ்டாலின் நாளை பீகார் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் உடன் திமுக பொருளாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான டி ஆர் பாலு செல்ல உள்ளார். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கட்சிகள் ஒற்றுமையோடு சந்திப்பது தொடர்பாகவும், பிரதமர் மோடிக்கு எதிராக வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.
இதையும் படியுங்கள்