கஞ்சா போதையில் இஸ்லாமிய நபர் கொல்லப்பட்டாரா..?? இபிஎஸ் புகாருக்கு விளக்கம் அளித்த ஸ்டாலின்
விழுப்புரத்தில் கஞ்சா போதையில் இளைஞர்கள் சண்டையிட்ட போது அதை தடுக்க சென்ற இஸ்லாமிய நபர் கொலை செய்யப்பட்டதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியிருந்தார். இந்தநிலையில் கொலை சம்பவத்தில் நடந்தது என்ன என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்
விழுப்புரத்தில் கொலை
விழுப்புரத்தில் இஸ்லாமிய நபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளிக்கையில், விழுப்புரத்தில் இஸ்லாமிய நபர் கொலை தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, இந்த அரசினுடைய கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்குரிய விளக்கத்தை நான் தங்கள் வாயிலாகத் தெரிவிக்க விரும்புகிறேன்.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் விளக்கம்
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய சரகம். G.R.P தெருவைச் சேர்ந்தவரும், எம்.ஜி ரோட்டில் பழக்கடை நடத்தி வருபவருமான ஞானசேகர் என்பவருக்கு சாந்தி என்ற மனைவியும், ராஜசேகர், வல்லரசு என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில், ஞானசேகருக்கு வேறோரு பெண்ணிடம் தொடர்பு இருப்பதாகவும். அதனால் பழக்கடையில் வரும் வருமானத்தைக் குடும்பத்திற்குத் தருவதில்லை என்றும், சாந்தி தனது மகன்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, 29-3-2023 அன்று மாலை, ராஜசேகர் மற்றும் வல்லரசு ஆகியோர் தனது தந்தையிடம் இதுகுறித்துக் கேட்க பழக்கடைக்குச் சென்றபோது, அங்கு அவர் இல்லாததால், அங்கிருந்தவர்களிடம் கேட்டுபிரச்சினை செய்திருக்கிறார்கள்.
தனிப்பட்ட பிரச்சினையில் கொலை
அப்போது அப்பிரச்சனையில் தலையிட்ட இப்ராஹிம் என்பவரை வல்லரசு மற்றும் ராஜாசேகர் ஆகியோர் கத்தியால் குத்தி, காயம் ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. இச்சம்பவத்தில் காயம்பட்ட இப்ராஹிம்
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லக்கூடிய வழியில் உயிரிழந்திருக்கிறார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட வல்லரசு மற்றும் ராஜசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். காவல் துறையினர் மேல் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இது தனிப்பட்ட குடும்பப் துரதிருஷ்டவசமாக தாக்குதலுக்கு உள்ளாகி. உயிரிழந்திருக்கக்கூடிய சம்பவம் பிரச்சினையின் காரணமாக ஏற்பட்ட தகராறின் போது, அங்கு தடுக்க வந்த நபர், என்பதைத் தங்கள் வாயிலாக இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்ன முதலமைச்சர் மு க ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்