Mekedatu dam : மேகதாது அணை தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மேகதாது அணை விவகாரம்

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வரும் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் காவிரியின் குறுக்கே கர்நாடகா அரசு, மேகதாது அணையை கட்டும் திட்டம் தொடர்பாக விவாதிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது என தமிழக அரசு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

அத்துடன் காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்க தடை கோரி உச்சநீதிமன்றத்திலும் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில் மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக் கூடாது என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்திற்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதத்தின் வாயிலாக வலியுறுத்தி உள்ளார்.

பிரதமர் மோடிக்கு கடிதம்

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மேகதாது அணையை கர்நாடக அரசு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசால் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளன.மேலும்,மேகதாது அணை திட்டத்தின் விரிவான திட்ட விரிவான திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும்,காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக் கூடாது.இதுதொடர்பாக உரிய அறிவுரைகளை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் வழங்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : மேலிடத்தில் இருந்து வந்த அதிரடி உத்தரவு..டெல்லிக்கு பறக்கும் ஆளுநர் - பின்னணி காரணம் இதுவா ?

இதையும் படிங்க : Sonu Sood : நான்கு கை, நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை.. நடிகர் சோனு சூட் செய்த நெகிழ்ச்சி செயல்.!