Asianet News TamilAsianet News Tamil

மோடியின் டுவிட்டை ரீ டுவீட் செய்த மு.க.ஸ்டாலின்.! அனைத்து மொழிகளிலும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு

உச்சநீதிமன்ற தீர்ப்பை மாநில மொழிகளில் வெளியிடுவது தொடர்பான பிரதமர் மோடியின் டுவிட்டை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரீ டுவிட் செய்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

Chief Minister Stalin has welcomed the idea that the Supreme Court judgment should be published in all languages
Author
First Published Jan 23, 2023, 11:01 AM IST

அனைத்து மொழிகளிலும் தீர்ப்பு

உச்சநீதிமன்ற தீர்ப்பு ஆங்கிலத்தில் வெளியிடுவதால் மற்ற மொழிகளை சேர்ந்தவர்கள் சரியான முறையில் அர்த்தங்களை புரிய முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக இந்திய மொழிகளில் தீர்ப்புகளை மொழி பெயர்க்க வேண்டும் என கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந்தநிலையில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழிப்பெயர்த்து வெளியிடுவது தொடர்பான கருத்து தெரிவித்து பேசினார். இதற்க்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

ஈரோடு இடைத்தேர்தல்..! விருப்ப மனு தாக்கல் செய்ய தேதி குறித்த இபிஎஸ்.! அதிர்ச்சியில் அண்ணாமலை

Chief Minister Stalin has welcomed the idea that the Supreme Court judgment should be published in all languages

சாமானிய மக்கள் பயன்

இந்த வீடியோவை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி, தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் கிடைக்க செய்வதற்காக செய்ய வேண்டிய பணிகள் குறித்து, சந்திரசூட் பேசினார். இதற்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என ஆலோசனைகளை கூறியுள்ளார். இது பாராட்டத்தக்க முயற்சி. இதன் மூலம் இளைஞர்கள் மற்றும் சாமானிய மக்கள் பயனடைவர் என தெரிவித்து இருந்தார்.

 

வரவேற்பு தெரிவித்த ஸ்டாலின்

இந்த நிலையில் பிரதமர் மோடியின் டுவிட்டரை ரீ டுவிட் செய்த முதலமைச்சர் மு .க.ஸ்டாலின் கூறுகையில், உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என்று மாண்புமிகு தலைமை நீதிபதி அவர்கள் தெரிவித்துள்ள கருத்தை முழுமனதுடன் வரவேற்கிறேன். இதனோடு, உயர்நீதிமன்றங்களில் மாநில அலுவல் மொழிகளை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற நமது நீண்டநாள் கோரிக்கையையும் நிறைவேற்றுவது நீதியை நாட்டின் சாமானிய மக்களுக்கு அருகில் கொண்டு வரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த டுவிட்டர் பதிவு செய்துள்ளார்.

இதையும் படியுங்கள்

பகல் கனவு காணாதீங்க அண்ணாமலை.. உங்கள் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.. பாஜகவை பங்கம் செய்யும் முத்தரசன்.!

Follow Us:
Download App:
  • android
  • ios