ஆளாக்கி அழகு பார்த்த அன்னையின் மறைவு மகனுக்கும் ஈடுசெய்ய இயலாத இழப்பு.! வடிவேலுக்கு ஆறுதல் சொன்ன ஸ்டாலின்
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது மறைவிற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக விளங்கி வருபவர் நடிகர் வடிவேலு, இவர் நடித்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்தநிலையில் இவர் கடைசியாக நடித்த நாய் சேகர் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதனையடுத்து பல்வேறு திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் வடிவேலு நடித்து வருகிறார். இந்த நிலையில் மதுரை விரகனூரில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (87) நேற்று இரவு உடல்நல குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினரும், பொதுமக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நடிகர் வடிவேலு அவர்களின் அன்புத்தாயார் திருமதி. சரோஜினி அம்மாள் என்கிற பாப்பா அவர்கள் மதுரை விரகனூரில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். ஆளாக்கி அழகு பார்த்த அன்னையின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கும் ஈடுசெய்ய இயலாதஇழப்பாகும். 'வைகைப் புயல்' திரு. வடிவேலு அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்