அடி தூள்.. ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே வழிகாட்டும் முதல்வர் ஸ்டாலின்.. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அமைச்சர்.
இந்த அமைச்சர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களும் பொது மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்யவும், இயற்கை சீற்றம், பேரிடர் மற்றும் அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது
தமிழகம் முழுவதும் அவசரகால மற்றும் இயற்கை சீற்றம், மற்றும் வளர்ச்சிப்பணிகள் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளவும், அரசு கொண்டுவரும் திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்யவும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அமைச்சரை நியமித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக சில அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு:-
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி மக்கள் நல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எதிர்பாராதவகையில் பல மக்கள் நலத் திட்டங்களும் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது, அந்த வரிசையில் ஒருசில மாவட்டங்களுக்கு மாவட்ட பொறுப்பு அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: இந்தி படிக்க சொன்ன ஊழியரை வேலைய விட்டே தூக்கிட்டோம்.. தமிழர்களிடம் மன்னிப்பு கேட்ட சொமேட்டோ நிறுவனம்.
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வா வேலு, சேலம் மாவட்டத்திற்கு நகராட்சி நிர்வாகம், நகர் பகுதி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என் நேரு, தர்மபுரி மாவட்டத்திற்கு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்,காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன்,தேனி மாவட்டத்திற்கு கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை அமைச்சர் பெரியசாமி,தென்காசி மாவட்டத்திற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்: எப்படியாவது மத வெறுப்பை உருவாக்கி வெறுப்பு அரசியல் செய்ய பாஜக துடிக்கிறது.. பயங்கரமாக எச்சரித்த தயாநிதி மாறன்.
அதேபோல், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, திருநெல்வேலி மாவட்டத்திற்கு போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், திருவாரூர் மாவட்டத்திற்கு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, பெரம்பலூர் மாவட்டத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ். எஸ் சிவசங்கர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் நியமித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த அமைச்சர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களும் பொது மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்யவும், இயற்கை சீற்றம், பேரிடர் மற்றும் அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.