’நம்பர் 1 தமிழ்நாடு’ என்ற நிலையை அடைய அமீரகப் பயணம் பயனுள்ளதாக அமையும் என்ற நம்பிக்கை ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத் துறை அமைச்சர் மற்றும் அயலக வர்த்தகத் துறையின் இணை அமைச்சருடனான சந்திப்பில் வலுப்பெற்றது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

’நம்பர் 1 தமிழ்நாடு’ என்ற நிலையை அடைய அமீரகப் பயணம் பயனுள்ளதாக அமையும் என்ற நம்பிக்கை ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத் துறை அமைச்சர் மற்றும் அயலக வர்த்தகத் துறையின் இணை அமைச்சருடனான சந்திப்பில் வலுப்பெற்றது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க.ஸ்டாலின்‌ பல்வேறு துறைகளில்‌ தமிழகத்தில்‌ முதலீடுகள்‌ மேற்கொள்வது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின்‌ அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்‌.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதுக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ இன்று துபாய்‌ பன்னாட்டு நிதி மையத்தில்‌ ஐக்கிய அரபு அமீரகத்தின்‌ பொருளாதாரத்‌ துறை அமைச்சர்‌ மாண்புமிகு அப்துல்லா பின்‌ டூக்‌ அல்‌ மர்ரி அவர்களையும்‌,ஐக்கிய அரபு அமீரகத்தின்‌ வெளிநாட்டு வர்த்தகத்‌ துறை அமைச்சர்‌ தானி பின்‌ அகமது அல்‌ சியோதி அவர்களையும்‌ சந்தித்து, பல்வேறு துறைகளில்‌ தமிழகத்தில்‌ முதலீடுகள்‌ மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்‌.

இச்சந்திப்பின்போது, ஐக்கிய அரபு நாடுகளில்‌ உள்ள குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்களுக்கும்‌, தமிழ்நாட்டிற்கும்‌ இடையே உள்ள வர்த்தக உறவுகளை மேம்படுத்துதல்‌, புத்தாக்கம்‌ மற்றும்‌ புத்தொழில்கள்‌, தொழில்‌ சூழலை மேம்படுத்துதல்‌, விவசாயம்‌, உணவு பதப்படுத்துதல்‌, ஜவுளி மற்றும்‌ ஆடைகள்‌, நகை மற்றும்‌ விலையுயர்ந்த கற்கள்‌, மின்வாகனங்கள்‌, மின்னணுவியல்‌, மோட்டார்‌ வாகனம்‌ மற்றும்‌ வாகன உதிரி பாகங்கள்‌, பொறியியல்‌, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில்‌ இணைந்து பணியாற்றி முதலீடுகள்‌ மேற்கொள்வதன்‌ மூலம்‌ தமிழ்நாட்டிற்கும்‌, ஐக்கிய அரபு நாடுகளுக்கும்‌ இடையே உள்ள பொருளாதாரம்‌ மற்றும்‌ வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்தும்‌ ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர்‌ தமிழ்நாட்டில்‌ தொழில்‌ தொடங்குவதற்கு நிலவும்‌ சாதகமான சூழ்நிலையை எடுத்துக்கூறி, ஐக்கிய அரபு அமீரகத்தின்‌ ஒரு அமைச்சர்களையும்‌ தமிழகம்‌ வருமாறு அழைப்பு விடுத்தார்‌. மேலும்‌, தமிழகத்தில்‌ தொழில்‌ தொடங்கிட, முதலீட்டாளர்கள்‌ சூழுவினையும்‌ தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டுமென்றும்‌ கேட்டுக்‌ கொண்டார்‌.

இந்த நிகழ்வின்போது, தொழில்‌ துறை அமைச்சர்‌ தங்கம்‌ தென்னரசு, தொழில்‌ துறை கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌ கிருஷ்ணன்‌, தொழில்‌ வழிகாட்டி நிறுவனத்தின்‌ மேலாண்மை இயக்குநர்‌ பூஜா குல்கர்னி, தமிழ்நாடு அரசின்‌ உயர்‌ அலுவலர்கள்‌, ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்தியத்‌ தூதர்‌ சஞ்சய்‌ சுதிர்‌, துணைத்‌ தூதர்‌ அமன்‌ பூரி மற்றும்‌ இந்தியாவிற்கான ஐக்கிய அரபு அமீரக நாட்டின்‌ தூதர்‌ அகமது அல்‌ பன்னா ஆகியோர்‌ உடனிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே அமீரக அரசு சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

Scroll to load tweet…