Election Results : உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் அண்மையில் நடந்து முடிந்தன. 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளது.
இன்று தேர்தல் முடிவு :
மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளுக்கு பிப்ரவரி 10-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. ஒட்டுமொத்த உ.பி. சட்டசபை தேர்தலில் மொத்தம் 61.04% வாக்குகள் பதிவாகி யிருந்தன. அதேபோல் 117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 20-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது.

அங்கு மொத்தம் 71.95% வாக்குகள் பதிவாகின. உத்தரகாண்ட் மாநிலத்திலும், கோவாவிலும் பிப்ரவரி 14 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. 70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகாண்டில் மொத்தம் 65.37 % வாக்குகள் பதிவானது. அதேபோல் 40 தொகுதிகளைக் கொண்ட கோவாவில் 79.61% வாக்குகள் பதிவாகின. இதில் 60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் பிப்ரவரி 8 மற்றும் மார்ச் 5-ந் தேதி என 2 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது.
காங்கிரஸ் ஒரு ட்ரெம்பெட் :
இங்கு மொத்தமாக சுமார் 74% வாக்குகள் பதிவாகின. இந்த 5 மாநில தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட உள்ளன. உத்தரகாண்ட் முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான புஷ்கர் சிங் தாமி செய்தியாளர்களிடம்பேசியபோது, ‘தேர்தலில் காங்கிரஸ் எந்த இடத்திலும் போட்டியிடவில்லை. அவர்கள் மக்கள் முன் எழுப்ப எந்த பிரச்சினையும் இல்லை. இப்போது தேர்தல் முடிந்து விட்டதால், இன்று (மார்ச் 10) பா.ஜ.க. வெற்றியை கொண்டாடும் என்பதால் முடிவுகள் வெளியாகும் வரை அவர்களால், அதாவது காங்கிரஸ் டிரம்பெட் ஊத முடியும்.

பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் உத்தரகாண்டில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைப்பதை காட்டுகின்றன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கணித்ததை விட எங்களின் உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கும், மேலும் கட்சி பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்கும். மாநிலத்தில் பா.ஜ.க. செய்த பணிக்கான சான்றிதழை மக்கள் வழங்கியுள்ளனர்’ என்று கூறினார்.
உத்தரகாண்டில் 70 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தேடுப்பதற்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 14ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளது. 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளது.
