Asianet News TamilAsianet News Tamil

முதல்வர் மு.க.ஸ்டாலினின் அடுத்த டார்கெட்... சர்வதேச தரத்திற்கும் மேம்படுத்த திட்டம்...!

நெருக்கடியில் சிக்கியுள்ள சுற்றுலா மற்றும் அதனை சார்ந்துள்ள தொழில்களை மீட்டெடுப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. 

Chief minister MK Stalin next move to improve tourism
Author
Chennai, First Published Jul 1, 2021, 7:48 PM IST

தமிழ்நாடு பல ஆண்டுகளாக உள்நாடு மற்றும் வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக இருந்து வருகிறது. எனும், கடத்த பதினெட்டு மாதங்களாக கொரோனா பெருந்தொற்றினால் சுற்றுலாத் துறை பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ள நிலையில், நெருக்கடியில் சிக்கியுள்ள சுற்றுலா மற்றும் அதனை சார்ந்துள்ள தொழில்களை மீட்டெடுப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னாக, இந்து சமயம் மற்றும் அறுநிலையங்கள் துறை அமைச்சர்  பி. கே. சேகர்பாபு கற்றுலாத் துறை அமைச்சர் மதியேந்தன், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இந்த கூட்டத்தில் முக்கிய அம்சங்களாக உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில், ஒருங்கிணைந்த கற்று பெருந்திட்டம் செயல்படுத்துவதற்கும் கற்றுலாக்களை வகைப்படுத்தி சர்வதேச தரத்திற்கும் மேம்படுத்துவதற்கும், சுற்றுலா ஈர்ப்புகளை உருவாக்கி  அவர்களது  தங்கும் கால அளவினை அதிகரிப்பது தொடர்பாகவும் முடிவெடுக்கப்பட்டது. 

Chief minister MK Stalin next move to improve tourism

இயற்கை சுற்றுலா, வனம் மற்றும் சுற்றுசூழல் சுற்றுலா, சாகச விளையாட்டுக்கள், கடற்கரை சுற்றுலா மற்றும் கேளிக்கைப் பூங்காக்களை அமைக்க சர்வதேச நிறுவனங்களை ஊக்குவிப்பது குறித்த வழிவகைகள் குறித்துக் கலந்தாலோசிக்கப்பட்டது. கன்னியாகுமரியில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் சிலையைப் புதிய தொழில் நுட்பத்தில் வண்ண ஒளியூட்டுதல் மற்றும் பூம்புகார் சுற்றுலா வளாகத்தைச் சீரமைத்து மேம்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் சுற்றுலா உட்கட்டமைப்பினைச் சர்வதேசத் தரத்திற்கு மேம்படுத்துதல், சர்வதேசச் சந்தைப்படுத்துதலை மேம்படுத்துதல், வணிக சின்னத்தினைப் பிரபலப்படுத்துதல் ஆகியவற்றைப் பற்றியும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், புதிய தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கொள்கை, அரசு நிதியுதவியுடன் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித் திட்டம், புதிய சுற்றுலாத் தலங்கள் உருவாக்குதல், மேம்படுத்திடுதல் மற்றும் பராமரித்தல், தனியார் முதலீடு மூலம் ஹோட்டல், ரிசார்ட் மற்றும் கன்வென்சன் சென்டர் உருவாக்குதல், சுற்றுலாத் துறையில் பொது தனியர் பங்களிப்பு ஆகியவை பற்றியும் முடிவெடுக்கப்பட்டது.

Chief minister MK Stalin next move to improve tourism

கலை பண்பாடு, தொல்லியல், அருங்காட்சியங்கள் துறை  கலை பண்பாட்டுத் துறையின்கீழ் கலைஞர்களுக்கு 2021ம் ஆண்டுக்கு கலைமாமணி விருதுகள் வழங்குதல், நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தில் புதிய கலைஞர்களை உறுப்பினராகச் சேர்க்க சிறப்பு முகாம்களை நடத்தவும், நலவாரியத்தில் பதிவுபெற்று 60 வயது நிறைவடைந்த தகுதியுள்ள கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 

அருங்காட்சியகங்கள் துறையின்கீழ் இயங்கும் சென்னை அரசு அரசு அருங்காட்சியகம், 23 இடங்களில் செயல்படும் மாவட்ட அருங்காட்சியகங்களின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் பற்றி ஆய்வு  நடத்தவும், சென்னை அரசு அருங்காட்சியகத்தில் கலையரங்குத் தொகுப்பை ரூ.24.56 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துதல் குறித்தும், பாந்தியன் கட்டடம் மீட்டுருவாக்கம் மொத்தம் ரூ.30 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Chief minister MK Stalin next move to improve tourism


தொல்லியல் துறையின் கீழ் உலகத்தரம் வாய்ந்த புதிய அகழ்வைப்பகங்களை ஏற்படுத்துதல், சங்ககால துறைமுகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் ஆழ்கடல் கள் ஆய்வு மற்றும் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளுதல், பழங்காலக் கோட்டைகளையும் அரண்மனைகளையும் பழமை மாறாமல் புனரமைத்து வண்ண விளக்கு வசதிகள் மேற்கொள்ளுதல், வரலாற்றுச் சின்னங்களில் முகப்பு விளக்குகள் ஏற்படுத்துதல் புதுப்பித்தல், 7 இடங்களில் நடைபெற்றுவரும் தொல்லியல் அகழ்வாய்வுகள் குறித்தும், கீழடியில் அமையவுள்ள உலகத்தரம் வாய்ந்த அகழ்வைப்பகம் தொடர்பாகவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.

மேலும், அருங்காட்சியகங்களில் இருக்கும் அரும்பொருட்களை மெய்நிகர் அருங்காட்சியகமாக ஆவணப்படுத்துதல், சேகரிப்புகளில் உள்ள அனைத்து அரும்பொருட்களையும் காட்சிப்படுத்திட புதியதாக இருபெரும் கட்டடங்கள் ஏற்படுத்துதல் குறித்தும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios