நீர்நிலைகளில் மலரும் பூ தான் தாமரை, அதற்காக எல்லா இடத்திலேயும் மலர்ந்துவிடாது-மோடிக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்

கடந்த நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற, ஊரக உள்ளாட்சித் தேர்தல் - இவ்வாறு இதற்கு முன்னர் நடந்த எல்லாத் தேர்தல்களிலும் தோற்கடிக்கப்பட்ட சின்னம்தான் இரட்டை இலை என்பதை மறந்துடக் கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Chief Minister M K Stalin has said that lotus does not bloom in all water bodies

'உங்களில் ஒருவன் மு.க.ஸ்டாலின் பதில்கள்'

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், 'உங்களில் ஒருவன் பதில்கள்' என்ற தலைப்பில் கேள்விகளுக்கு பதில் அளித்து வீடியோ வெளியிட்டு வருகிறார். இந்தநிலையில் தற்போது அதிமுக, பாஜக, ஈரோடு தேர்தல் தொடர்பாக பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதில் முக்கியமான கேள்விகளும் அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களை தற்போது பார்க்கலாம்..

கேள்வி: அண்மையில் உங்களை நெகிழ வைத்த மனிதர் அல்லது சம்பவம் ஏதாவது இருக்கிறதா?

பதில்: சிறைக் கைதிகள் படிக்கின்ற வகையில் சிறைச்சாலைகளில் நூலகம் அமைக்கும் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இதற்காகச் சிறைத்துறைக்குப் பலரும் ஆர்வத்தோடு புத்தகங்களை வழங்கி வருகிறார்கள். இராமநாதபுரத்தைச் சேர்ந்த பெரியவர் - 92 வயதான பாலகிருஷ்ணன் அவர்கள், தனது சேகரிப்பில் இருந்த 300 புத்தகங்களையும் சிறைத்துறைக்கு வழங்கி இருக்கிறார். தன் வாழ்நாளெல்லாம் சேகரித்த புத்தகங்களில் ஒரு பகுதியை சிறைக்கைதிகள் பயன்பெற வேண்டும் என்று கொடுத்திருக்கும் அவரது முடிவு மிகவும் பாராட்டத்தக்கது. உண்மையிலேயே இந்தச் செய்தியைப் பாத்து நெகிழ்ந்து போனேன்.

இன்னும் எத்தனை உயிர்கள் பலியானால் சட்டத்திற்கு ஆளுநர் கையெழுத்து போடுவார்? இறக்கி அடிக்கும் மு.க.ஸ்டாலின்

Chief Minister M K Stalin has said that lotus does not bloom in all water bodies

கேள்வி: பொய் வாக்குறுதிகளைக் கொடுத்துதான், திமுக ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டது என்று, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருக்கிறாரே? 

பதில்: தூத்துக்குடியில் போராடுடியவர்களைத் துப்பாக்கியால் சுடச் சொல்லிவிட்டு. 'டிவியைப் பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டேன்' என்று பொய் சொன்னாரே அந்த பழனிசாமியா? அவர் அப்படித்தான் பேசுவார்! அளித்த வாக்குறுதிகளில் 85 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டி இருக்கிறோம். சொல்லாத பல திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறோம். முன்பு சொன்ன புதுமைப் பெண் திட்டம் என்பது நாங்கள் தேர்தல் வாக்குறுதியில் சொல்லாதது. ஓரிரு திட்டங்கள் பாக்கி இருக்கிறது. அது எல்லாத்தையும் வருகிற ஓராண்டிற்குள் நிறைவேற்றிக் காட்டுவோம். நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவேன்.

நீண்ட நாட்களாக தூக்கத்தில் இருக்கும் முதல்வர் ஸ்டாலினை எழுப்புங்கள்.! தமிழக சட்ட ஒழுங்கை காட்டுங்கள்- குஷ்பூ

Chief Minister M K Stalin has said that lotus does not bloom in all water bodies

கேள்வி: இரட்டை இலைச் சின்னம் அ.தி.மு.க.-விற்கு கிடைத்துவிட்டதால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அந்த கட்சிக்கு சாதகம் என்கிற கருத்து பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: கடந்த நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற, ஊரக உள்ளாட்சித் தேர்தல் - இவ்வாறு இதற்கு முன்னர் நடந்த எல்லாத் தேர்தல்களிலும் தோற்கடிக்கப்பட்ட சின்னம்தான் இரட்டை இலை என்பதை மறந்துடக் கூடாது.

கேள்வி: நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திரமோடி ஆற்றிய பதிலுரை பற்றி உங்கள் பார்வை என்ன?

 பதில்: யார் கேட்ட கேள்விக்கும் பதில் சொல்லாமல், மணிக்கணக்கில் எவ்வாறு பேசுவதை என்பதை நான் தெரிந்து கொண்டேன். பா.ஜ.க ஆட்சி மீதும், பிரதமர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. சொல்லவில்லை. அது பிரதமர் பதில் எதற்குமே 'நாட்டு மக்கள் எனக்குக் கவசமாக இருக்கிறார்கள்' என்பதை மக்கள் சொல்லவில்லை, அவராகச் சொல்லிக் கொள்கிறார். சேறு வீசுங்கள் தாமரை மலரும்' என்று சொல்லி இருக்கிறார் பிரதமர். நீர்நிலைகளில் மலரும் பூதான் தாமரை, அதற்காகத் தண்ணீர் உள்ள எல்லா இடத்திலேயும் மலர்ந்துவிடாது. சேறு இருக்கிற இடமெல்லாம் மலர்ந்துவிடாது.

மக்கள் செங்கல்லை கையில் எடுப்பதற்கு முன்பு.. எய்ம்ஸ் ஸ்டார்ட் பண்ணுங்க - எச்சரித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Chief Minister M K Stalin has said that lotus does not bloom in all water bodies

இவ்வாறு வார்த்தை ஜாலங்கள்தான் அவரது உரையில் இருந்ததே தவிர, பிபிசி ஆவணப்படம் பற்றியோ, அதானி விவகாரம் குறித்தோ அவர் விளக்கம் அளிக்கவில்லை. நாட்டுக்கு கொடுத்த வாக்குறுதியில் எதை நிறைவேற்றி இருக்கிறோம் என்று பிரதமர் வரிசைப்படுத்தவில்லை, சேதுசமுத்திரத் திட்டம், நீட், மாநில உரிமைகள், ஆளுநரின் தலையீடுகள். ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காதது என எத்தனையோ கேள்விகளைத் தி.மு.க உறுப்பினர்கள் கேட்டார்கள் அதற்கும் பிரதமர் உரையில் பதில் இல்லை.குறிப்பாக தமிழ்நாட்டுக்குச் சொல்ல பிரதமரிடம் பதில் இல்லையென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

நீதிமன்ற வளாகத்தில் கொலை! தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதற்கு இதுவே சாட்சி! வச்சு செய்யும் இபிஎஸ்.!
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios