அதிமுக - பாஜக கள்ளக்கூட்டணி.. உண்மையான திமுக-காரன் யாரு தெரியுமா.? SpaceXல் முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு !!
திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பாக திராவிட மாதம் என்ற தலைப்பில் இன்று திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் X-SPACES-ல் சிறப்புரையாற்றினார்.
அப்போது உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ 'திராவிட மாதம்' என்று சொல்லப்படும் செப்டம்பர் மாதத்தில், தினமும் ஒரு தலைப்பில், இயக்க முன்னோடிகள் கலந்துகொண்டு திராவிட இயக்கக் கருத்துகளைப் பேசி இருக்கிறார்கள். நிறைவு நாளான இன்றைக்கு, என்னைப் பேச அழைத்திருக்கிறீர்கள். மிகவும் மகிழ்ச்சி.
தலைமைக் கழகத்தின் சார்பில் மட்டுமல்ல, ஒவ்வொரு அணியும், மாவட்டக் கழகங்களும் கூட தனித்தனியாக, இந்த செப்டம்பர் மாதம் முழுவதும் முப்பெரும் விழாவைக் கொண்டாடுகிறார்கள். அந்த வரிசையில்தான் ஐ.டி. விங், இந்த ஸ்பேசஸ்-ற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
2000 ஆயிரம் ஆண்டுகள் ஒடுக்கப்பட்ட நாம் மீண்டெழுந்த வரலாறு - தந்தை பெரியார் காட்டிய பகுத்தறிவு - சமத்துவப் பாதை, பேரறிஞர் அண்ணா வகுத்துக் கொடுத்துள்ள கருத்தியல் தளம், தமிழினத் தலைவர் வடித்து கொடுத்த ஐம்பெரும் முழக்கங்கள் - 2018-ஆம் ஆண்டு நான் செயல் தலைவரான பிறகு முன்வைத்த ஐம்பெரும் முழக்கங்கள் என்று, 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற எதிர்காலத் தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான திட்டங்கள் என்று நாம் பேச - எழுத கொள்கைகளும் கருத்துகளும் ஏராளமாக இருக்கிறது.
ஒரு காலத்தில், நம்முடைய கொள்கைகளைப் பரப்ப, பேச்சு மேடை - நாடக மேடை - திரையுலகம் – எழுத்துலகம் என்று மக்களை ‘ரீச்’ செய்வதற்கான அனைத்து மீடியத்தையும் பயன்படுத்திக்கொண்டோம். பாட்டு, கவிதை, கதை, நாவல், திரைப்படம், நாடகம், நாளிதழ், வார இதழ், மாத இதழ் என்று எவ்வாறெல்லாம் மக்களிடம் பேச முடியுமோ, அவ்வாறெல்லாம் பேசினோம். 'முரசொலி பொங்கல் மலர்' எல்லாம் பாத்தீர்கள் என்றால், பொக்கிஷம் மாதிரி இருக்கும். பெரிய பெரிய மாநாடெல்லாம் நடத்த வேண்டும் என்று இல்லை.
நம்முடைய கருத்துகளை - கொள்கைகளை இன்னொருவரிடம் பேசுவதே, மிகப்பெரிய பரப்புரைதான். ஃபேஸ்புக் - யூடியூப் - வாட்ஸ்அப் - ட்விட்டர் - இன்ஸ்டாகிராம் - ஷேர்சாட் – டெலிகிராம் என்று நிறைய வசதிகள் வந்துவிட்டது. இது எல்லாவற்றையும் நம் கொள்கைகளைக் கொண்டு செல்ல – கட்சியை வளர்க்கப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்! நம்முடைய சாதனைகளை சொல்ல வேண்டும்! மக்களை திசைதிருப்ப - ஏமாற்ற அவதூறு பரப்பும் கூட்டத்தை அம்பலப்படுத்த வேண்டும். இதையெல்லாம் நான் பலமுறை சொல்லியிருக்கிறேன்.
இதைக் கவனத்தில் வைத்து செயல்படுங்கள். அவ்வாறு செயல்படும் ஐ.டி. விங்-ஐ சேர்ந்தவர்களுக்கும் - தங்களின் அடையாளத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் கட்சிக்காக உழைக்கும் பலருக்கும் நன்றி! ஒரே வட்டத்திற்குள் நாம் சுருங்கிடாமல், வெவ்வேறு தளங்களை நாம் 'ரீச்'-ஆக சமூக வலைத்தளங்கள் பயன்படுகிறது.
அதனால்தான், நான்கூட இப்போது 'ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா' என்ற பாட்காஸ்ட் சீரிஸ்-ஐத் தொடங்கியிருக்கிறேன். ஏற்கனவே இரண்டு எபிஸோட் வந்துவிட்டது, விரைவாகவே அடுத்ததும் வரும். இந்தப் பாட்காஸ்ட் சீரிஸ், தமிழ்நாட்டை தாண்டி நம்முடைய கருத்துகளை, தெலுங்கு - மலையாளம் - கன்னடம் – இந்தி என்று வெவ்வேறு மொழிகளில் கொண்டு செல்கிறோம்.
"என்னடா இது!? இவர்கள் தமிழ்நாட்டில் முடங்கிக் கிடப்பார்கள் என்று பார்த்தால், இந்தி பேசும் மாநிலத்திற்கும் வந்துவிட்டார்கள்" என்று புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள். பார்லிமெண்ட் எலக்ஷனுக்கான என்னுடைய பிரச்சாரத்தை நான் தொடங்கிவிட்டேன்; நாம் சேர்ந்து முன்னெடுப்போம்! வெற்றி பெறுவோம்! இந்திய அரசியலில் எல்லாவற்றுக்கும் முன்னோடியாக இருக்கும் நாம்தான், இந்த மாதிரி பாட்காஸ்ட் பிரச்சாரத்திலும் முன்னோடியாக இருக்கிறோம். இவ்வாறு எல்லாவற்றிலும் நாம் அப்டேட்டாகவும் இருக்க வேண்டும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அட்வான்ஸாகவும் இருக்க வேண்டும். அதனால்தான், இப்போது நம்முடைய கருத்துகள் மற்ற மொழி ஊடகங்களிலும் எதிரொலிக்க தொடங்கியிருக்கிறது. இந்தியாவுக்காகப் பேசுவோம் - எபிஸோட் 1 & 2, இதுவரை பல லட்சம் பேரால் கேட்கப்பட்டுள்ளது. இதெல்லாம் பத்து, பதினைந்து மாநாடு நடத்தியதற்குச் சமம். மாநாடு என்றால் நம்முடைய ஆட்கள்தான் பெரும்பாலும் வருவார்கள்.
ஆனால், நம்மை எதிர்ப்பவர்கள் கூட, இதைக் கேட்கிறார்கள். இதன் மூலமாக வீண் வெறுப்பிலும் – பொய்களை நம்பி அறியாமையிலும் இருக்கும் அவர்கள், உண்மைகளைப் புரிந்துகொண்டு மனம் மாறுவார்கள். நம்முடைய கொள்கைகளையும் – சாதனைகளையும் சொல்வதற்கு மட்டுமே நாம் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோம்” என்று பேசினார்.