எனக்கு இருக்குற  தில்லு ஸ்டாலின்கிட்ட இருக்குதா?:    கெத்தாக தெறிக்க விடும் எடப்பாடியார்!

ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸின் பயங்கரவாத பழிவாங்கல் கொள்கையை இளைஞர்கள் மத்தியில் பரப்பி, அந்த அமைப்பிற்கு ஆள் திரட்டும் ரகசிய பயிற்சி வகுப்புகள் கோவையில் இயங்கி  வந்துள்ளன. யார் யாரெல்லாம் அதில் பங்கேற்றனர் எனும் விவரங்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டுள்ளன.
-    பத்திரிக்கை செய்தி

*    உத்திரபிரதேசத்தில், திருமணத்துக்கு அதிகாலை 2 மணிக்கு வரவேண்டிய மணமகன், ரெண்டு மணி நேரம் தாமதமாக வந்ததால், அவரை மணமகள் நிராகரித்தார். மணப்பெண்ணின் பக்கத்து வீட்டு இளைஞரை திடீர் மணமகனாக்கிட அக்குடும்பம் முயற்சித்தது, அந்த இளைஞரும் சம்மதித்தார். எனவே அவர்களுக்கு திருமணம் நடந்தது. இதைப்பார்த்து லேட்டாக வந்த மணமகனுக்கு கடும் அதிர்ச்சி.
-    பத்திரிக்கை செய்தி.

*    மும்பையில் கடந்த முறை பா.ஜ.க. ஆட்சியின் போது மெட்ரோ ரயில் பயணியருக்காக ஆரே காலனி பகுதியில் கார் பார்க்கிங் வசதிக்காக மரங்கள் வெட்டப்பட இருந்தது. இதை அப்போதைய கூட்டணி கட்சியான சிவசேனா கடுமையாய் எதிர்த்தது. ஆனால் இப்போது அவர்களின் ஆட்சி அமைந்ததும், அவுரங்காபாத்தில், பால் தாக்கரே நினைவிடத்துக்காக ஆயிரத்துக்கும் அதிகமான மரங்களை வெட்டப்போவதாக தகவல் வந்துள்ளது. சிவசேனாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கொள்கை இப்போது என்னவாயிற்று? இதன் மூலம் தாங்கள் ரெட்டை வேடதாரிகள் என்பதை நிரூபித்துள்ளது அக்கட்சி.
-    அம்ருதா பட்னவிஸ்

*    பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பது வெட்கக்கேடான விஷயம். இதை தடுக்க, கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பது உண்மைதான். அதேநேரத்தில் இந்த பிரச்னைக்கு அரசியல் மற்றும் நிர்வாக ரீதியான முடிவுகளை எடுக்க வேண்டியதும் அவசியம். 
-    வெங்கய்யா நாயுடு.

*    உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை. நேர்மையான, சுதந்திரமான தேர்தல் என்ற உயர்ந்த நோக்கத்தை கேலிக் கூத்தாக்கியுள்ளனர். 
-    ஸ்டாலின்

*    மின்சார துறையில் கேங்மேன் பணிகளுக்கான தேர்வில் இடைத்தரகர்களுக்கு வேலை இல்லை. முழு தகுதியின் அடிப்படையில்தான் வேலை வழங்கப்படுகிறது. யாராவது ஏமாந்தால் அதற்கு அரசாங்கம் பொறுப்பாகாது. 
-    அமைச்சர் தங்கமணி

*    நடிகர் ரஜினிகாந்த் அதன் படத்தின் விளம்பரத்துக்காக அரசியல் பேசுகின்றார்! என்கின்றனர். அனால் விளம்பரத்துக்கு பெயரே சூப்பர் ஸ்டார்தான். சூப்பர் ஸ்டாரின் பெயரே ரஜினிகாந்த் தான். 
-    ராகவா லாரன்ஸ்

*    கடந்த காலங்களில் வெங்காயம் விலை ஏறியதால், அரசு கவிந்த வரலாறு நமது நாட்டில் உண்டு. அதனால் அது போல் நிகழாமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெங்காய விலையின் மிக  கடுமையான ஏற்றத்தினால் மக்கள் கடும் அவதிக்கும், ஆதங்கத்துக்கும் ஆளாகியுள்ளனர். 
-    திருநாவுக்கரசர்

*    மத்திய அரசால் ஏழை எளிய மக்களுக்கு, விவசாயிகளுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது. மாநில அரசுகளே தங்களின் நிதி ஆதாரங்களை வைத்துக் கொண்டு ஏதாவது செய்தால்தான் உண்டு. ஆனாலும் நம் மாநில அரசுக்கு, மத்திய அரசுதான் சூத்ரதாரி. அவர்கள் நூலை ஆட்டுவிக்கும்படி இவர்கள் ஆடுகின்றனர். ஏழு மாதங்களுக்கு முன் வெற்றி பெற்ற மத்திய அரசு, மக்களுக்கு இவ்வளவு துரோகம் விளைவிக்குமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 
-    ப.சிதம்பரம். 

*    உள்ளாட்சி தேர்தல் குறித்த வழக்கில், நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு என்பது நீதிக்கு கிடைத்த வெற்றி. நியாயமான காரணத்தை வைத்தே தி.மு.க. வழக்கு தொடர்ந்தது. வார்டுகளை வரைமுறைப்படுத்தாமல் தேர்தலை நடத்துவது என்பது சமூக நீதிக்கு எதிரானது. தி.மு.க. தலைமையிலான கூட்டணி, உள்ளாட்சி தேர்தலை சந்திக்க எப்போதும் தயார் நிலையில் உள்ளது.
-    வைகோ

*    ஸ்டாலின் ஒவ்வொரு முறை ஊடகத்தினரை சந்திக்கும்போதும் ‘அ.தி.மு.க.வுக்கு தில் உள்ளதா? திராணி உள்ளதா?’ என கேள்வி எழுப்புவார். அதே கேள்வியை, நாங்கள் தற்போது எழுப்புகிறோம். உள்ளாட்சி தேர்தல் விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பின் என்ன தயக்கம்? மக்களை சந்திக்க ஏன் தயக்கம்? அவருக்குதான் தைரியமில்லை தேர்தலை சந்திக்க.
-    எடப்பாடி பழனிசாமி