Chief Minister BhanwariLal Prohi Chief Minister Edappadi Palanisamy congratulated him.
புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தொரிவித்துள்ளார். தொலைபேசி மூலம் ஆளுநரை தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளையும், மகிழ்ச்சியையும் முதல்வர் தெரிவித்தார்.
தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யாவின் பதவிகாலம் முடிந்த பிறகு, மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
வித்யாசாகர் ராவ், கடந்த ஒரு வருடகாலமாக தமிழக பொறுப்பு ஆளுநராக இருந்து வந்தார். இந்த நிலையில், தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித்தை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.
அதேபோல், மேகாலயா, அசாம் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கும் புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது.
தமிழகத்துக்கு புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோகித், வரும் புதன்கிழமை அன்று பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
இந்நிலையில், புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தொரிவித்துள்ளார். தொலைபேசி மூலம் ஆளுநரை தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளையும், மகிழ்ச்சியையும் முதல்வர் தெரிவித்தார்.
