பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த ப.சிதம்பரம் ..! 

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் முதல் மூன்று கட்ட தேர்தலிலும் காங்கிரஸ் தான் முந்துகிறது என சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்ட காரணங்களுக்காக இந்திய மக்கள் பாஜகவிற்கு எதிராக வாக்களித்து உள்ளனர் என குறிப்பிட்டு உள்ளார் சிதம்பரம். நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த 303 தொகுதிகளிலும் பாஜக வை விட காங்கிரஸ் தான் முந்துகிறது என தெரிவித்து உள்ளார் சிதம்பரம் 

எந்த ஒரு பொதுக் கூட்டத்தில் மோடி பேசினாலும், பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 50 இடங்களில் கூட வெற்றி பெறாது என பேசி வருகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் சிதம்பரம்

"பிரதமர் மோடி தூக்கத்தில் மட்டுமல்லாது விழித்திருக்கும் போதும் கனவு காண்கிறார். நடந்து முடிந்த மூன்று கட்ட தேர்தலிலும் காங்கிரசுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் தேசியவாத பற்றி பேசி வரும் மோடி ஒன்றை நினைவு வைத்திருக்க வேண்டும். 1947,1964 ,1971 ஆகிய ஆண்டுகளில் நடந்த போர்களில் இந்தியா வெற்றி பெற்றது.அதற்கு காரணம் நம்மிடம் உள்ள வலுவான பாதுகாப்பு படை தான். தனி மனிதர் அல்ல என குறிப்பிட்டிருந்தார்.

ஜிஎஸ்டி பணமதிப்பிழப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக பாரதிய ஜனதா கட்சியை மக்கள் பெருமளவு வெறுத்து உள்ளனர். அது மட்டுமில்லாமல், தேர்தல் கமிஷன் பாரபட்சமாக செயல்படுகிறது என்றும் மோடி செல்லும் ஒவ்வொரு பிரச்சார பொதுக் கூட்டத்திற்கும் 10 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகிறது என குறிப்பிட்டு பேசிய சிதம்பரம் இதுகுறித்து தேர்தல் கமிஷன் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை என தெரிவித்தார்.