நீட் தேர்வில் சிதம்பரம் மனைவியிடம் சிபாரிசு செய்திருக்கலாமே என பாஜக தலைவர் தமிழிசை கே.எஸ்.அழகிரிக்கு பதிலடி கொடுத்துள்ளார். 

இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ் அழகிரி, ‘’நீட் தேர்வினால் இனி சாதாரண மாணவர்கள் மருத்துவர் ஆக முடியாது. ஆனால் நீட் என்பது தமிழக மக்களுக்கு பொருத்தமில்லாமல் போகிறது என்பதனை தொடர்ந்து அது வேண்டாம் என்று நாங்கள் சொல்லிவிட்டோம்.

ராகுல் காந்தியும், ஸ்டாலினும் ஒரே மேடையில் தமிழகத்திற்கு நீட் தேவையில்லை என்று கூறி விட்டனர். காங்கிரஸ் கொண்டு வந்ததாலேயே நீட் தேர்வினை நடைமுறை படுத்துவதாக சொல்பவர்கள் அவர்கள் வேண்டாம் என சொல்லும் பொது அதை நீக்க வேண்டும் என கருத்துத் தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை, ‘’ நீட் வேண்டாம் என்றால் பாஜக அதை நிறுத்தி இருக்கலாமே எனும் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களே... நீட் விலக்கு கிடைக்க பாஜக அரசு முயன்றபோது அதை தடுத்தது நளினி சிதம்பரம் அவர்கள்தானே உங்களுக்கு சிபாரிசு செய்த சிதம்பரத்திடமே நளினி சிதம்பரம் நீட்டுக்காக வாதாட வேண்டாமென சிபாரிசு செய்திருக்கலாமே’’ எனத் தெரிவித்துள்ளார்.