சிதம்பரம் நடராஜர் கோயில் ஒன்றும் தீட்சிதர்களுக்கு சொந்தமானதல்ல.. கணக்கு கேட்டா சொல்லணும்! அமைச்சர் சேகர்பாபு

தவறு எங்கு நடந்தாலும் அதை தட்டிக்கேட்கின்ற சுட்டிக்காட்டுகின்ற கடமை இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் ஒன்றும் தீட்சிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல.

Chidambaram Nataraja Temple does not belong to Dikshitar.. Minister Sekar Babu

தீட்சிதர்கள் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் சந்திக்கத் தயார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். 

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தவறு எங்கு நடந்தாலும் அதை தட்டிக்கேட்கின்ற சுட்டிக்காட்டுகின்ற கடமை இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் ஒன்றும் தீட்சிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல. நம்மை ஆண்ட மன்னர்களால், முன்னோர்களால் உருவாக்கப்பட்டது. 

இதையும் படிங்க;- இந்துத்துவா தமிழர்களின் அடையாளத்தை அழிக்கிறது.? தீபாவளிக்கு முதல்வர் வாழ்த்து சொல்லாதது ஏன் தெரியுமா?- ஆ.ராசா

Chidambaram Nataraja Temple does not belong to Dikshitar.. Minister Sekar Babu

திருக்கோயில் வருமானங்கள் குறித்து கேட்கின்றபோது கணக்கு காட்டுவதும் பதில் சொல்வதும் தீட்சிதர்களின் கடமை. நிர்வாகத்தில் உள்ள குளறுபடிகளை கேள்விகளாக கேட்கின்ற போது அதற்கு பதில் சொல்வது அவர்களுடைய கடமையாகும். 

கோயிலின் உள்ளே மானாவாரியாக இஷ்டத்திற்கு கட்டடங்களை எழுப்பியிருக்கிறார்கள். இப்படி எழுப்பப்பட்ட கட்டிடங்கள் நிலை குறித்து கேள்வி கேட்பது எங்களுடைய கடமை. அந்த திருக்கோயிலில் மன்னர்களால் சேர்ந்து வைக்கப்பட்டுள்ள சொத்துக்கள், நகைகள், விலைமதிப்புள்ள பொருட்கள் நிலையை ஆய்வு செய்வதும் கடமை என்றார். இதற்கு தீட்சிதர்கள் முழுவதும் ஒத்துழைக்க வேண்டும். 

இதையும் படிங்க;-  தீட்சிதர்களுக்கு எதிராக நாங்கள் இல்லை.. ஆதினங்களின் பாரம்பரியங்களில் அரசு தலையிடாது - அமைச்சர் சேகர்பாபு

Chidambaram Nataraja Temple does not belong to Dikshitar.. Minister Sekar Babu

இந்து சமய அறநிலைத்துறையின் பணி நியாயத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. தீட்சிதர்கள் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் சந்திக்கத் தயார். எந்த விதமான அத்துமீறல்களும், அதிகார துஷ்டயோகம் செய்யவில்லை என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios