மகன் கார்த்தி அடைக்கப்பட்ட  அதே... ஜெயில் ரூம் நம்பர் "7"..!  திஹார் சிறையில் சிதம்பரம்..!   

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் திஹார் சிறையில் ப.சிதம்பரத்தை 5 நாட்கள் அடைக்க உத்தரவிட்டு இருக்கிறது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம். 

இந்நிலையில் அவர் தனக்கு தனி அறையும், வெஸ்டர்ன் டாய்லட் வசதியும் கேட்டு கோரிக்கை விடுத்ததில் தனி அறை மட்டும் ஒதுக்க உத்தரடவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் திஹார் சிறையில் உள்ள வசதிகளும், நடத்தைகளும் பற்றி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

திஹார் சிறை டெல்லி மேற்குப் பகுதியில் 7 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. இந்தச் சிறை வளாகத்தில் ஒன்பது மத்திய சிறைச் சாலைகள் உள்ளன. ஜீன்ஸ் பேன்ட் தவிர வேறு எந்த ஆடைகளையும் கைதிகள் அணியலாம். கைதிகள் அவரவர் உடைகளை அவரவர்களே துவைத்துக் கொள்ள வேண்டும். மொத்தமாக அடைத்து வைத்து இருக்கும் செல்லின் ஒரு மூலையில் இண்டியன் வகை டாய்லெட் இருக்கும். அதைத்தான் தினப்படி கைதி பயன்படுத்த வேண்டும்.

தினமும் இரண்டு வேலைதான் சாப்பாடு. நான்வெஜ் கிடையாது. கைதியின் இன்ஷியலை வைத்து வாரத்தில் இரண்டு நாட்கள் பார்வையாளர்களை சந்திக்க அனுமதிக்கிறார்கள். சந்திப்பு நேரம் அரை மணி நேரம் மட்டுமே. பார்வையாளர்கள் அறையில் ஐம்பது மைக்குகள் இருக்கும். சந்திக்க வருபவருக்கும் கைதிக்கும் இடையில் இடைவெளி இருக்கும். ஒரே நேரத்தில் இங்கிருந்து ஐம்பது பேர்கள் மைக்கில் எதிர்புறம் உள்ள கைதிகளிடம் பேசுவார்கள் கூச்சல், குழப்பமாகத்தான் இருக்கும்.

இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், இதற்கு முன்னதாக கார்த்திக் சிதம்பரம் திகார் சிறையில் இருக்கும் போது அடைக்கப்பட்ட ரூம் நம்பர் 7 இல் தான் தற்போது சிதம்பரத்தையும் அடைக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ப.சிதம்பரத்திற்கு ஒதுக்கப்படும், தனி அறை இப்படித்தாம் இருக்கும்... திஹார் சிறையில் உள்ள தனி சிறை.. கொசுக்கடியும், வெயில் காலத்தில் அனல் கக்கும் வெயிலாலும் பலருக்கும் உடலில் கொப்புளங்கள் ஏற்படும். அனைத்துக் கைதிகளும் ஒரே மாதிரி தான் நடத்தப்படுவார்கள். விஐபி- சாதாரண கைதி என வசதிகளுக்கு எந்த பாரபட்சமும் கிடையாது. விஐபிகள் தனியாக அடைத்து வைக்கப்படுவார்கள். அவ்வளவே. அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் வழக்குத் தொடரப்படுவர்களுக்கு இந்த சிறைச்சாலையே ஒதுக்கப்படும். காரணம் மனதளவிலும், உடலளவிலும் அவர்களை சோர்வடையச் செய்வதே இதன் நோக்கம்.