காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்து கடும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், கட்டுப்பாடுகளை மீறி மைதானத்துக்குள் நுழைந்த நாம் தமிழர் கட்சியினர் செருப்புகளையும், கொடிகளையும் வீசி தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்தனர், இதைத் தொடர்ந்து  பதற்றம் ஏற்பட்டதையடுத்து போட்டிகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் இடையேயான கிரிக்கெட் போட்டியின் போது, மைதானத்தில் காலணி வீசபப்ட்டது.

காலணி வீசிய நபர் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்து மைதானத்திலிருந்து அப்புறப்படுத்தினர். மைதானத்தில் விழுந்த காலணியை, கிரிக்கெட் வீரர் ஜடேஜா, அங்கிருந்து அப்புறப்படுத்தினார். போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஒரு சிலர்  போலீசிரின் கண்களில் மண்ணைத் தூவி மஞ்சள் ஜெர்சிக்குள் கறுப்பு உடையணிந்து  மைதானத்துக்குள் நுழைந்தனர். அவர்களையும் காவலர்கள் அங்கிருந்து வெளியேற்றினர். இந்த களேபரத்தில் 5 நிமிடங்கள் ஆட்டம் நிறுத்தப்பட்டது. போட்டிகள் ஏன்  நிறுத்தப்பட்டது  என உலகம் முழுவதும்  தெரிந்தது. 

தமிழர்களின் இந்த போராட்டம் முதல் நாளிலேயே வெற்றி பெற்றது என்றே கூற வேண்டும்.