chennai tamil right conference ...yechuri speech
ஒரு மொழியை மட்டுமே முன்னிறுத்துவதால் மொழி, இனம் சார்ந்த அடிமைத்தனம் ஏற்பட்டு விடும் என்றும், இப்பிரச்சனையில் நாட்டின் எதிர்காலத்தையே பாதிக்கும் அளவுக்கு ஆர்.எஸ்.எஸ். மிகப்பெரிய சதியில் ஈடுபட்டு வருகிறது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் தமிழர் உரிமை மாநாடு நடைபெற்றது.

கீழடியைப் பாதுகாப்பது, இந்தி திணிப்பை எதிர்ப்பது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்ற இந்த மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி ,நல்லகண்ணு, ஜி.ராமகிருஷ்ணன், கனிமொழி, திருமாவளவன். எழுத்தாளர் பிரபஞ்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்தி திணிப்பு எதிர்ப்பு வரலாறு, கீழடி தொல்லியல் அகழ்வாய்வு’ ஆகிய இரு தலைப்புகளில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து பேசிய சீத்தாராம் யெச்சூரி, நாட்டின் எதிர்காலத்தையே பாதிக்கும் அளவுக்கு ஆர்.எஸ்.எஸ். மிகப்பெரிய சதியில் ஈடுபட்டு வருகிறது என்று குற்றம்சாட்டினார்..
மொழி எம்பது தொடர்புக்கான கருவிமட்டும் அல்ல சிந்தனைக்கான கருவி என்றும் , ஒரு மொழியை மட்டுமே முன்னிறுத்துவதால் மொழி, இனம் சார்ந்த அடிமைத்தனம் ஏற்படும் என்றும் யெச்சூரி தெரிவித்தார்.
