Asianet News TamilAsianet News Tamil

அரக்கோணம், அச்சரபாக்கம் வரை விரிவடைகிறது சென்னை.. சீங்கப்பூரைப் போல மாற்ற திமுக மாஸ்டர் பிளான்.

சென்னை மாஸ்டர் பிளான் 3-ன் படி  அச்சரப்பாக்கம், அரக்கோணம் வரை சென்னை நகரை விரிவுபடுத்த திட்டம் வைத்திருப்பதாக அமைச்சர் தா.மோ அன்பரசன் மற்றும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளனர்.

 

Chennai is expanding to Arakkonam and Acharapakkam. DMK's master plan to make it like Singapore.
Author
First Published Sep 19, 2022, 4:55 PM IST

சென்னை மாஸ்டர் பிளான் 3-ன் படி  அச்சரப்பாக்கம், அரக்கோணம் வரை சென்னை நகரை விரிவுபடுத்த திட்டம் வைத்திருப்பதாக அமைச்சர் தா.மோ அன்பரசன் மற்றும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளனர். மூன்றாவது முழுமைத் திட்டம் நகரில் ஏற்படும் ஆக்கிரமிப்புகளை தவிர்க்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறியுள்ளனர்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அவர் அறிவிக்கும் திட்டங்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது, அதேபோல் ஓருசில திட்டங்கள் கடுமையாக எதிர்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மின்சார கட்டண உயர்வு, திமுக அரசுக்கு எதிரான விமர்சனத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. மறுபுறம் சென்னை மாநகரம் மிகுந்த நெரிசல் மிக்க நகரமாக மாறி வருகிறது, இந்நிலையில் சென்னை நகரை விரிவுபடுத்தும் திட்டத்தில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

Chennai is expanding to Arakkonam and Acharapakkam. DMK's master plan to make it like Singapore.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் மூன்றாவது முழுமைத் திட்டம் அதாவது தொலைநோக்கு ஆவணம் தயாரித்தல், master plan 3 என்ற தலைப்பில்  சென்னை தேனாம்பேட்டையில் நட்சத்திர விடுதியில் பயிலரங்கம் நடைபெற்றது. அதில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் சிறு குறு தொழில் துறை அமைச்சர் தா.மோஅன்பரசன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள்:  தமிழகத்தில் விரைவில் பாஜக ஆட்சி... திமுவை உதறவிட்ட MLA தமிழ்ச் செல்வன்.

உலகவங்கி நிதி மூலம் மூன்றாவது முழுமை திட்டம் செயல்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முழுமைத் திட்டம் 2026 முடிவடைய உள்ளது, அதேபோல்  2027,  2046 ஆண்களுக்கான சென்னை மாநகரத்தின் வளர்ச்சி ஒரு திட்டம் மற்றும் அதற்கான தொலைநோக்கு ஆவணம் தயாரிக்கும் பணி நடைபெற உள்ளது, அதற்கான பயிலரங்கத்தில் இன்று அதிகாரிகள் கலந்து கொண்டனர், அதாவது சென்னை முழுமைத் திட்டம்-3  1189  சதூர கிலோ மீட்டர் பரப்பளவில் 2027-ல் அமைப்பதற்கான  பயிலரங்கத்தில் சுற்றுச் சூழல், போக்குவரத்து உள்ளிட்ட பிரிவுகள் கீழ் திட்டம் வரையாறை செய்யப்படுகிறது. 

இதையும் படியுங்கள்: ஐயோ... முதலில் நான் இந்தியனே இல்ல.. கோர்ட் வாசலில் நின்று கெத்து காட்டிய சீமான்.. அமித்ஷாவுக்கு பதிலடி

இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் தா.மோ அன்பரசன், மாநகராட்சி வளர்ச்சி அடையும்போது மக்களின் தேவையும் அதிகரிக்கிறது. அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது, அதே நேரத்தில் போக்குவரத்து, கல்வி,  சுகாதாரம்,  எதிர்கால தொழில்நுட்பம்,  தூய்மை போன்றவற்றை மேம்படுத்த வேண்டும்.  நீர்நிலைகள் மற்றும் வனப்பகுதிகளை பாதுகாக்க வேண்டும், சென்னை திட்டம் மூன்றின் படி அரக்கோணம், அச்சரப்பாக்கம் போன்ற பகுதிகள் வரை சென்னையில் விரிவுபடுத்தப்பட உள்ளது. அரசு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் புறம்போக்கு நிலங்கள் உள்ளது. அந்த மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.

Chennai is expanding to Arakkonam and Acharapakkam. DMK's master plan to make it like Singapore.

இதேபோல் பேசிய அமைச்சர் முத்துசாமி, சென்னையில் நெரிசல் அதிகரித்து வரும் நிலையில் அண்ணாசாலை உட்பட சென்னையில் மேலும் 10 பிரதான சாலைகள் அகலப்படுத்த பட வேண்டி உள்ளது 50 ஆண்டுகளுக்குப் பிறகு தேவை என்பதை கருத்தில் கொண்டு இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும், சாதாரண மக்களிடம் கருத்து கேட்க வேண்டும், அதேபோல மழை நீர் அதிகம் தேங்கும் பகுதிகளில் தனித்தனியாக கண்டறிந்து பிரச்சறைகளை களைவதற்கான விரிவான திட்டம் வரையறை செய்யப்பட்டு வருகிறது என்றார். இனிவரும் காலங்களில் சிங்கப்பூர்,  சிட்னி, மான்செஸ்டர் போன்ற நகரங்களை ஒத்த வகையில் வளர்ச்சித் திட்டங்கள் உருவாக்கப்படும் என்றார். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios