ஐயோ... முதலில் நான் இந்தியனே இல்ல.. கோர்ட் வாசலில் நின்று கெத்து காட்டிய சீமான்.. அமித்ஷாவுக்கு பதிலடி
நான் இந்தியனே இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும், அந்த மொழிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்
.
நான் இந்தியனே இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும், அந்த மொழிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும், இந்தியை நாம் பாதுகாக்க வேண்டும் என பேசியுள்ள நிலையில் சீமான் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் நாட்டில் ஆட்சி மொழியாக இந்தியை திணிப்பதற்கான முயற்சிகளில் தீவிரம்காட்டி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியை நிர்வாக மொழியாக அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என வெளிப்படையானவே பேசியிருந்தார்.
அதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்தது. குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பு காட்டின, அதனால் அப்போது அதிலிருந்து அவர் பின்வாங்கினார், ஆனால் தற்போது மீண்டும் இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக கொண்டுவர வேண்டும் என அவர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தி மொழியை ஆங்கிலத்துக்கு மாற்றாக பயன்படுத்த வேண்டும் என்றும், இந்தியாவை பாதுகாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் அவர் பேசியுள்ளார்.
இதையும் படியுங்கள்: “எட்டப்பன் ஓபிஎஸ்சுக்கு ஒரே வழி.. ஸ்டாலினுக்கு நாட்டுல நடக்குறதே தெரியாது”.. அலறவிட்ட சி.வி சண்முகம் !!
மீண்டும் வலிந்து இந்தியை திணிப்பதற்கான முயற்சி தான் அமித்ஷாவின் இந்த பேச்சு என்றும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில்தான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இது தொடர்பான கேள்விக்கு நான் இந்தியனை இல்லை என்றும் தனக்கும் அந்த மொழிக்கும் சம்பந்தமில்லை என கூறியுள்ளார். அதாவது,
இதையும் படியுங்கள்: இரட்டை இலைக்கு ஓட்டு போட்டதால் திமுக மக்களை வஞ்சிக்கிறது.. போட்டு தாக்கும் ஆர்.பி.உதயகுமார்..!
கடந்த 2018 ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் மதிமுக நாம் தமிழர்கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலில், பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சீமான் இன்று ஆஜரானார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக என்ற கட்சியின் முக்கிய நோக்கமே ஹிந்தி சமஸ்கிருதத்தை திணிப்பதுதான், மூன்று முதல் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு வரை தாய்மொழிக்கல்வி படித்தால் போதும் என்று சொல்வது தமிழுக்கு சரிபடாது என்றார்.
தமிழ் மொழி என்பது ஒரு கடல், முதுகலை ஆய்வு மாணவர்கள் கூட சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமல் பொழிப்புரையை தேடுகின்றனர். அதேபோல் புதிய கல்விக் கொள்கை என்பது குழந்தைகளுக்கு ஒரு மரண சாசனம் என அறிஞர்கள் கூறி வருகின்றனர். புதிய கல்விக் கொள்கையை பல கல்வியாளர்கள், ஆசிரியர்களை கொண்டு ஆலோசித்த பிறகு கொண்டு வந்ததாக தமிழிசை சௌந்தரராஜன் கூறுகிறார், குமரி அனந்தன் அவர்கள் அவருக்கு அந்த பெயரை வைத்து வீணடித்து விட்டார் என்றுதான் சொல்லுவேன், மாணவர்களை எல்லாவற்றிற்கும் தேர்வு எழுதச் சொல்லும் ஆட்சியாளர்கள், முதல்வர்கள், அமைச்சர்கள் ஏன் தேர்வு எழுதுவதில்லை என கேள்வி எழுப்பினார்.
வெளிமாநிலங்களில் நீட் தேர்வுக்கான வினாத்தாள்கள் 35 லட்ச ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதற்குப் பெயர்தான் தேர்வா? தமிழகத்தில் இதற்கு முன்பு தரமான மருத்துவர்கள் உருவாகவில்லையா என சரமாரியாக கேள்வி எழுப்பினார். அப்போது, ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும், இந்தியை பாதுகாக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீமான், முதலில் நான் இந்தியனே இல்லை, எனக்கும் அந்த மொழிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.