வெப்பநிலை மற்றும் புற ஊதாக் கதிர் வீச்சு அதிகம் உள்ள பகுதிகளில் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளதாக சென்னை ஐஐடி பேராசிரியர் சச்சின் குந்தே  தலைமையிலான குழு தெரிவித்துள்ளது .  மேலும் இது தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் . கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது இதுவரையில் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டிவிட்டது ,  இதில்  இத்தாலி அமெரிக்கா பிரான்ஸ் ஜெர்மனி பிரிட்டன் ஸ்பெயின் போன்ற நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன . கொரோனா வைரஸ் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடந்து வருகிறது ,  தற்போது இந்தியா போன்ற நாடுகளில்  வெப்ப நிலை அதிகரித்துள்ளதால் கொரோனா வைரஸின் பாதிப்புகள் வெகுவாக குறையும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தகவல் தெரிவித்துள்ளன. 

இந்தியாவிலும் இதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது ,  வெப்ப நிலை குறைந்த இடங்களில் தீவிரமாக பரவுமா.?  அது வெப்பத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றனவா.?  என்பது குறித்து சென்னை ஐஐடியில் சிவில் துறை பேராசிரியர் சச்சின் குந்தே தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது தற்போது அதன் முடிவு வெளியிடப்பட்டுள்ளது  , அதில் வெப்பநிலை மற்றும் புற ஊதாக் கதிர்வீச்சு அதிகம் உள்ள பகுதிகளில் கொரோனா தோற்று கட்டுக்குள் உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன .  மேலும் செயற்கையாக புற ஊதா கதிர் வீச்சை உருவாக்கினால் சமூகப்பார்வை தடுக்கலாம்  எனவும் கூறப்பட்டுள்ளது .  உலகம் முழுவதும் 1.7 லட்சம் பேரின் தரவுகளை ஆராய்ந்துள்ளது,  90 சதவீதம் முடிவுகள் 3 டிகிரி செல்சியஸ் முதல் 12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்ட  பகுதிகளில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தெரிவிக்கின்றன என முடிவுகளை வெளியிட்டதாக குறிப்பிட்டுள்ள ஐஐடி ,  தரவுகளை மட்டுமே ஆராய்ந்து இருப்பதால், 

உடலியல் ஆய்வை முன்னெடுத்த பின்பே நிரூபணம் செய்யமுடியும் என தெரிவித்துள்ளது .  மாசாசூசெட்ஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி)யின் நரம்பியல் விஞ்ஞானி காசிம் புகாரி , சுற்றுச் சூழல் விஞ்ஞானி  யூசுப் ஜமீல் இருவரும் வானிலை மாற்றத்தால் வைரஸ் பரவுவது மெதுவாக நடைபெறுமா அல்லது பரவுவதை நிறுத்துமா என்பது குறித்து ஆய்வு செய்தனர் ,  ஆய்வில் உலகின் பெரும்பாலான பகுதிகளில் புதிய கரோனா வைரஸ் கோடைகாலத்தில் குறைந்துவிட்டது என்பதை கண்டறிந்துள்ளனர் .  70 முதல் 80 சதவீத வைரஸ்கள் காற்றின் மேற்பரப்பில் இருக்கும்போது அவை நன்றாக உயிர் வாழாது என மார் லேபரட்டரி தெரிவித்துள்ளது கொரோனா வைரஸின் ஹாட்ஸ்பாட்கள் அனைத்தும் 30 டிகிரி முதல் 50 டிகிரி வடக்கு அட்ச ரேகைக்கு இடையில் ஒரு மிதமான மண்டலத்தில் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் இந்த வைரஸின் பரவலை குறைப்பதற்கான மிகச் சிறந்த வழி சமூக இடைவெளிதான் என தெரிவித்துள்ளார் .