Asianet News TamilAsianet News Tamil

சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.. குஷியில் துள்ளி குதிக்கும் மு.க.ஸ்டாலின்..!

பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு விமர்சனங்களை எதிர்கொள்ளும் சகிப்புத்தன்மை வேண்டும் என கூறி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான 4 அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அதிரடியாக ரத்து செய்துள்ள்ளார்.

Chennai High Court quashes 4 defamation cases against Stalin
Author
Chennai, First Published Dec 10, 2020, 4:46 PM IST

 பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு விமர்சனங்களை எதிர்கொள்ளும் சகிப்புத்தன்மை வேண்டும் என கூறி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான 4 அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அதிரடியாக ரத்து செய்துள்ள்ளார்.

தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது அவரை பற்றியும், தமிழக அரசு குறித்தும், அமைச்சர்கள், அவர்களின் துறைகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துகள் குறித்து தமிழகத்தில் பல்வேறு நீதிமன்றங்களில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டாலின் தனித்தனியே வழக்குகள் தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில், அந்த வழக்குகளில் 12 வழக்குகள் நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

Chennai High Court quashes 4 defamation cases against Stalin

அப்போது ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.குமரேசன், அரசு மற்றும் முதல்வருக்கு எதிரான கருத்துகள் அனைத்தும் விமர்சனம் தானே தவிர அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்கக்கூடியவை அல்ல என வாதிட்டார். மேலும் இந்த 12 வழக்குகளில் 3 வழக்களுக்கான அரசாணைகளை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே ரத்து செய்துள்ளாக குறிப்பிட்டார். பின்னர், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயலலிதா சார்பில் தொடரப்பட்ட மூன்று அவதூறு வழக்குகளையும், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடர்ந்த ஒரு அவதூறு வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

Chennai High Court quashes 4 defamation cases against Stalin

இதனையடுத்து, பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் விமர்சனங்களை ஏற்கக்கூடிய சகிப்புத்தன்மை வேண்டும் என்றும், அதேசமயம் விமர்சனங்களை முன்வைப்பதற்கு முன்பாக தங்கள் பொறுப்பை உணர்ந்து கருத்துகளை தெரிவிக்க வேண்டுமென்றும் நீதிபதி அறிவுறுத்தினார். இதையடுத்து, ஸ்டாலின் தொடர்ந்த மற்ற வழக்குகளின் விசாரணையை டிசம்பர் 14-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios