Asianet News TamilAsianet News Tamil

விஜயகாந்துடன் பிரேமலதா துபாய் செல்லாததற்கு இதுதான் காரணம்.. வெளியானது தகவல்..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகஸ்ட் 30ம் தேதி சிகிச்சைக்காக துபாய் சென்றார். சென்னை விமான நிலையத்தில் விஜயகாந்தை, அவரது உதவியாளர்கள் வீல் சேரில் வைத்து வேகமாக தள்ளிக் கொண்டே செல்லும் வீடியோ காட்சிகள் வைரலானது. 

Chennai High Court orders issuance of Premalatha passport to go to Dubai
Author
Chennai, First Published Sep 2, 2021, 9:53 AM IST

கணவர் விஜயகாந்தின் சிகிச்சைக்காக துபாய் செல்ல பிரேமலதாவின் பாஸ்போர்ட்டை வழங்க மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகஸ்ட் 30ம் தேதி சிகிச்சைக்காக துபாய் சென்றார். சென்னை விமான நிலையத்தில் விஜயகாந்தை, அவரது உதவியாளர்கள் வீல் சேரில் வைத்து வேகமாக தள்ளிக் கொண்டே செல்லும் வீடியோ காட்சிகள் வைரலானது. இவருடன்  அவரது மகன் சண்முக பாண்டியன் மட்டுமே சென்றார். மனைவி பிரேமலாத விஜயகாந்த் செல்லவில்லை. இது தொடர்பாக பல்வேறு யூகங்கள் எழுந்தன. இந்நிலையில், பிரேமலதா விஜயகாந்த் துபாய் செல்லாததற்கு அவரது பாஸ்போர்ட் காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடந்தார். 

Chennai High Court orders issuance of Premalatha passport to go to Dubai

பிரேமலதா மீது நெல்லை போலீசார் கடந்த 2017-ம் ஆண்டு தொடரப்பட்ட குற்ற வழக்கு மறைக்கப்பட்டுள்ளதாகக் கூறி பாஸ்போர்ட் அதிகாரி அவரது பாஸ்போர்ட்டை சரண்டர் செய்யுமாறு உத்தரவிட்டு திரும்ப பெற்றுக்கொண்டார். இதை எதிர்த்து பிரேமலதா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. 

Chennai High Court orders issuance of Premalatha passport to go to Dubai

அப்போது பிரேமலதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நெல்லை போலீசாரால் தொடரப்பட்ட குற்ற வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் இருந்து எந்த சம்மனும் வரவில்லை. இந்த வழக்கு தொடர்பாக எந்தத் தகவலையும், மறைக்கவில்லை. மனுதாரர் தனது கணவர் விஜயகாந்தின் சிகிச்சையின்போது உடனிருந்து உதவ வேண்டியிருப்பதால் அவருடைய பாஸ்போர்ட்டை திருப்பி தர உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராகவுள்ளோம் என வாதிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி பிரேமலதாவின் பாஸ்போர்ட்டை உடனடியாக திரும்ப வழங்குமாறு மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.  இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணை 4 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Follow Us:
Download App:
  • android
  • ios