Asianet News TamilAsianet News Tamil

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால்... தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு...!

ஊரடங்கின்போது செயல்பட அனுமதிக்கப்பட்ட நிறுவனங்கள்  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை  பின்பற்றாவிட்டால் உடனடி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

Chennai high court order to tamilnadu government
Author
Chennai, First Published May 17, 2021, 6:09 PM IST

ரெனால்ட் நிசான் கார் மற்றும் விப்ரோ சிலிண்டர் ஆகியவை செயல்பட அனுமதித்ததை எதிர்த்து ஊழியர் சங்கங்கள் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முழு ஊரடங்கில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி உண்டு என்றாலும், ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது ஊரடங்கின் பயனுக்கு எதிரானதாகும் என வாதிடப்பட்டது. கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றவில்லை, மருந்துகள் தடுப்பூசி பற்றாக்குறை உள்ள நிலையில் அரசின் உத்தரவில் பொது நலன் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. 

3 ஷிப்டுகளை 2 ஆக குறைத்து அதிக ஊழியர்கள் ஒரே இடத்தில் பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நிசான் கார் நிறுவனம் தரப்பில் 5000 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள் ல், தனித்துவமான பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளது, இதுவரை எந்த அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை, பணி ஷிப்ட்டும் குறைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

Chennai high court order to tamilnadu government

 பின்னர் தலைமை நீதிபதி அமர்வு, நிறுவனம் மற்றும் பனியாளர்களின் பொருளாதார நிலையை ஆராய்ந்த பிறகே அரசு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும், இயங்க வேண்டுமென கட்டாயமாக்கவில்லை என்றும், குறிப்பிட்ட நிறுவனம் தான் அதில் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தது. 

ஊழியர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்பட நிறுவனங்களுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், எந்த எண்ணிக்கையில்  ஊழியர்களை பணியில் அமர்த்தப்ப்ட போகிறார்கள், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு என்ன பாதுகாப்பு மேற்கொள்ளப்படுகிறது என ரெனால்ட், விப்ரோ தெரிவிக்க உத்தரவிட்டுள்ளனர். 

Chennai high court order to tamilnadu government

ஊரடங்கில் விலக்கு பெற்ற ஆலைகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ம், பயிற்சியாளர்களுக்கும் போக்குவரத்து வசதி ஏற்படுத்த்த வேண்டும்,  தனி மனித விலகல் பின்பற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றாவில்லை என்றால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். வழக்கு மே 24ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios