Asianet News TamilAsianet News Tamil

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!

ஜெயக்குமார், மகள் ஜெயபிரியா மற்றும் அவரது மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், தன் மீதான அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயக்குமார், மற்றும் அவரது மகள், மருமகன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். 

Chennai High Court cancels land acquisition case against former minister Jayakumar
Author
First Published Sep 30, 2022, 11:14 AM IST

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. இதில். தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்துக் கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஜெயகுமாருக்கு எதிராக மகேஷ் காவல் நிலையதத்தில் புகார் அளித்திருந்தார்.

இதையும் படிங்க;- இறுமாப்போடு பேசும் திமுக அமைச்சர்களுக்கு மக்கள் தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள்.. இபிஎஸ் ஆவேசம்..!

Chennai High Court cancels land acquisition case against former minister Jayakumar

இந்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார், மகள் ஜெயபிரியா மற்றும் அவரது மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், தன் மீதான அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயக்குமார், மற்றும் அவரது மகள், மருமகன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். மகேஷ் அளித்த பொய் புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு அது, 2016-ல் நடந்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு 2021-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜெயக்குமார் தரப்பில் வாததிடப்பட்டது.

Chennai High Court cancels land acquisition case against former minister Jayakumar

அதற்கு 2016 ம் ஆண்டு ஜெயக்குமார் அமைச்சராக இருந்ததால் புகார் அளிக்க இயலவில்லை என்று புகார்தாரர் மகேஷ் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில், ஜெயக்குமார் வாதங்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அவரது மகள் ஜெயபிரியா மற்றும் மருமகனுக்கு எதிரான வழக்குகளையும் நீதிபதி இளந்திரையன் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதையும் படிங்க;-  அதிமுகவிற்கு புதிய நிர்வாகிகள் நியமனம்… அறிவிப்பை வெளியிட்டார் ஓ.பன்னீர்செல்வம்!!

Follow Us:
Download App:
  • android
  • ios