Asianet News TamilAsianet News Tamil

ஏனுங்க எடப்பாடியாரே கொஞ்சம் எதிர்ப்பு தெரிவிச்சுதான் பாருங்களேன்..! ஐகோர்ட் அடித்த ஆப்பு..!

மத்தியமைச்சர் நிதின் கட்கரி சேலத்தில் பிரசாரம் செய்யும்போது ‘சேலம் - சென்ன எட்டு வழிச்சாலை கட்டாயம் அமைக்கப்படும்.’ என்றார். கூட்டணி கட்சி தலைவர் பேசும்போது குறுக்கிடுவது தவறு என்பதால் முதல்வர் இ.பி.எஸ். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை: ராஜேந்திர பாலாஜி. 

chennai high court action
Author
Chennai, First Published Apr 17, 2019, 2:29 PM IST

* துரைமுருகன் தன் மகனுக்காக பொறுமை இழந்து, ‘கழிசடை அரசியல்வாதி, புறம்போக்குத் தனமாக வெற்றியை தடுக்கப்பார்க்கிறார்.’ என்று என்னை திட்டியுள்ளார். யார் சாக்கடை, யார் சந்தனம் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்: ஏ.சி.சண்முகம். (தண்ணியக் குடிங்க, தண்ணியக் குடிங்க தல. அதான் வெச்சு முடிவா செஞ்சுட்டாங்களே தேர்தல் ஆணையம். காய்ஞ்ச வேலூர்ல நீங்க  கொட்டுன பண மழை வீணா போச்சே.  இனி மறுபடியும் மொதல்ல இருந்து ஆரம்பிக்கணுமே?)

* சசிகலா என் உறவினர்தான், அதனால் என்னாச்சு? அரசியலில் உறவுகளை பார்க்கக்கூடாது: பழனிமாணிக்கம். (ஆமாண்ணே, கேரளாவின் சோலார் புகழ் சரிதாநாயர் கூட உங்களை நல்லாவே தெரியும், நீங்க அவங்களுக்கு அர்த்த ராத்திரியில போன் பண்ணி பேசுனீங்கன்னு கூட சொன்னாங்க. இதையெல்லாம் அரசியல்ல பார்க்கவா முடியும்?)

* மத்தியமைச்சர் நிதின் கட்கரி சேலத்தில் பிரசாரம் செய்யும்போது ‘சேலம் - சென்ன எட்டு வழிச்சாலை கட்டாயம் அமைக்கப்படும்.’ என்றார். கூட்டணி கட்சி தலைவர் பேசும்போது குறுக்கிடுவது தவறு என்பதால் முதல்வர் இ.பி.எஸ். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை: ராஜேந்திர பாலாஜி. (இல்ல ச்சும்மா எதிர்ப்பு தெரிவிச்சுதான் பாருங்களேன் என்ன நடக்குதுன்னு! பல லட்சம் மக்கள் அந்த சாலை வேண்டாமுன்னு சொன்னப்ப அதை கேட்காதது தவறுன்னு படல உங்களுக்கு. ஆனால் ஒரேயொரு கட்கரி பேசுறப்ப குறுக்கே பேசுவது மட்டும் தவறு! இல்லையா. 
இந்த தெனாவெட்டுக்குதான் ஐகோர்ட் வெச்சுது ஆப்பு)

* ஜி.எஸ்.டி.யால் தொழில்கள் பாதிக்கப்பட்டு இருப்பது போலவும், கோவையில்  தொழில்கள் வளர்ச்சி அடையாதது போலவும் பொய்யான தோற்றத்தை உருவாக்க எதிர்க்கட்சிகள் முயல்கின்றன: சி.பி.ராதாகிருஷ்ணன். (ஆமாமா தல. ஜி.எஸ்.டி. வந்த பிறகு தமிழ்நாடு முழுக்க வணிகம் பூத்துக் குலுங்கி புளங்காகிதம் அடைஞ்சிருக்குது. பிஸ்னஸ் பண்றவங்க லாபத்தை எங்கே கொட்டுறதுன்னு தெரியாம ரோட்டுல கொட்டிட்டு போறாங்க. ஆனா அதையெல்லாம் மறைச்சு என்னா புளுகு புளுகுது பாருங்க இந்த எதிர்க்கட்சிகள். நீங்க தூங்குங்க தல, கனவை தொடருங்க. )

* ரொம்ப கோபத்தில் நான் அரசியலுக்கு வந்தவன், வியாபாரத்திற்காக வரவில்லை. மக்களின் கோபம் தணியும் போதுதான் என் கோபமும் தணியும்: கமல்ஹாசன். (ஆண்டவரே,  ரிமோட்டை வீசி டி.வி.யை உடைக்கிற உங்க ஆக்டிங்கை பார்த்து அவனவன் செம்ம காண்டுல இருக்கான். உங்க வேட்பாளர்கள் சிலரோட ஜாதகத்தை பார்த்து மக்கள் ஏக டென்ஷன்ல இருக்காய்ங்க. கொஞ்சம் கம்முன்னு இருந்தீங்கன்னா எல்லாருக்கும் நல்லது.)

Follow Us:
Download App:
  • android
  • ios