சென்னையில் முக கவசம் அணியாமல் வெளியில் வருபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்  என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது , கொரோனா வைரசை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில்  சென்னை மாநகராட்சி இந்த புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது . கொரோனா வைரஸ் நாட்டின் மிக வேகமாக பரவி வருகிறது ,  நாடு முழுவதும் 11 ஆயிரத்து 439 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது . இதுவரை  1306 பேர் சிகிச்சைபெற்று குணமடைந்துள்ளனர் ,  377 பேர் உயிரிழந்துள்ளனர் .  இந்நிலையில் தமிழகத்தில் 1204 பேருக்கு  கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 81 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் .  பலியானோரின் எண்ணிக்கை 12 எட்டியுள்ளது .   

இந்நிலையில்  நாட்டிலேயே மகாராஷ்டிரா கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது ,  அங்கு 2784 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.  அதற்கு அடுத்து  இடத்திலுள்ள டெல்லியில்1561 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் .  1, 304 பேருடன் ராஜஸ்தானில் மூன்றாவது இடத்தில் உள்ளது.   1 204 பேருடன் தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது,  இந்நிலையில் இதே நிலை நீடித்தால்  தமிழகத்தில் வைரசை கட்டுபடித்தி விடலாம் என தமிழக சுகாதாரத்துறை  தெரிவித்துள்ளது , இதனால்  கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது ,  இந்நிலையில் இது குறித்து  சென்னை மாநகராட்சி சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது அதன் முழு விவரம் :- 

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட தேவைகளுக்காக வெளியே வரும்போது முகமூடிகளை அணிந்து வரவேண்டும் ,  மீறும்  நபர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார் ,  கொரோனா வைரஸ்  நோய்த்தொற்றை தடுக்கும் பொருட்டு தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு அரசால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது  பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வெளியேவர அனுமதிக்கப்பட்டுள்ளனர் கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறுவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .

 

அதன் ஒரு பகுதியாக பெருநகர சென்னை மாநகராட்சி தொற்றுநோய்கள் சட்டம் 1988 பிரிவு 2 ன்படி பெருநகர சென்னை மாநகராட்சி அதிகார எல்லைக்குட்பட்ட அனைத்து பொது  மக்களும் வெளியே வரும் போது கொரோனா வைரஸ் நோய்த்  தொற்று சமூகப்பரவலை  தவிர்ப்பதற்கான முகமூடி அணிந்து வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது .  இந்த உத்தரவை மீறும் நபர்கள் குற்றம் செய்ததாக கருதப்பட்டு காவல்துறையின் மூலம் அவர்களின் பயணம் செய்யும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுனர் உரிமம் ஆறுமாதங்களுக்கு இடைநிறுத்தம் செய்யப்படும்.  முகமூடி அணியாமல் வெளியே வரும் பாதசாரிகளுக்கு ஒரு நாளைக்கு 100 அபராதம் விதிக்கப்படும் ,  இந்த நடைமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார் .