சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் இனி எம்.ஜி.ஆர் பெயரில் அழைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 

சென்னையில் நடந்த பிர்ச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் இனி எம்.ஜி.ஆர் என்கிற பெயரில் அழைக்கப்படும் என அறிவித்துள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இந்தியாவின் முக்கியமான மிகப்பெரிய ரயில் நிலையம். 1856-ல் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையம் சென்னை நகரின் மிகப்பழமையான கட்டிடங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. இதற்கு தற்போது மோடி எம்.ஜி.ஆர் பெயரை சூட்டியுள்ளார். 

முன்னதாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் பெயரைச் சூட்ட வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.  இது குறித்து அவர் எழுதியிருந்த கடிதத்தில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு சென்னையில் உள்ள வரலாற்றுச் சிறப்பமிக்க இடமான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும்.

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ‘புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம்’ என்று பெயரிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மோடி எம்.ஜி.ஆர். பேயரை சூட்டியுள்ளார்.