விளக்கு ஏற்றுவதன் பின்னணியில் எவ்வித அரசியல், அறிவியல் இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியிருந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் அபிமானிகள் சிலர் அவர்களாகவே, சிலதை உருவகப்படுத்திக்கொண்டு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

நடிகர் ஒய்.ஜி.மகேந்திராவின் மகளும், கல்வி ஆர்வலருமான மதுவந்தி முதலில் வெளியிட்ட வீடியோ பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இரண்டாவது வீடியோவை வெளியிட்டிருந்தார்.

அதில், இந்தியாவில் 8,000 கோடி மக்களுக்கு(?) ( 130 கோடி மக்கள்தான்)  ரூ.5000 கோடியை அவர்களது வங்கிக் கணக்கில் ‘உஜ்வாலா’ திட்டத்தின் கீழ் மோடி செலுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளார் மதுவந்தி. இந்தியாவின் மக்கள்தொகை 140 கோடி. உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகையின் கூட்டுத்தொகை கூட 8,000 கோடி வராது. 

அவர் வழியிலேயே சென்றாலும், 8,000 கோடி பேருக்கு ரூ. 5,000 கோடியை பிரித்துக் கொடுத்தால் ஒருவருக்கு 1 ரூபாய் கூட தர முடியாது. அதுமட்டுமா, 30,000 கோடியில் 40 சதவீதம் 20,000 கோடி என்கிறார். அனைத்தும் பெண்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகச் சொல்கிறார். மொத்த ஜன் தன் வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கையே 36.25 கோடிதான். அவர் சொல்லும் கணக்கை பார்த்தால் ஒருவருக்கு 62.5 ரூபாய் தான் வருகிறது.

இந்த மதுவந்தி வீடியோ விவகாரம் #மதுவந்தி என்ற ஹேஷ்டேக், டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது.