Asianet News TamilAsianet News Tamil

பிரித்து கொடுக்கும் மத்திய வெகுமானம்.. பிடுங்கி தின்னும் மாநில அவமானம்.. அண்ணாமலை காட்டம்.


பிரித்து கொடுக்கும் மத்திய வெகுமானம், பிடுங்கி தின்னும் மாநில அவமானம் என தலைப்பில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:- 

Central reward for dividing .. Shame on the state for snatching and eating is Ugly .. Annamalai.
Author
Chennai, First Published May 14, 2022, 7:50 PM IST

பிரித்து கொடுக்கும் மத்திய வெகுமானம், பிடுங்கி தின்னும் மாநில அவமானம் என தலைப்பில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:- 

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மக்களுக்காக இலவச வீடு கட்டும் திட்டத்தில் பணம் ஒதுக்க லஞ்சம் கேட்டு தொல்லை தந்த தமிழக அரசு அதிகாரிகளால் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மணிகண்டன் மனைவியும் மூன்று சிறு பிள்ளைகளையும் தவிக்கவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெஞ்சை உலுக்கியது.  ஊழலாலும் லஞ்சத்தாலும் பாதிக்கப்பட்டு உயிரிழந்த இந்த அப்பாவி குடிமகனுக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண உதவியும், மறைந்த மணிகண்டன் மனைவிக்கு தமிழக அரசு பணி வழங்க வேண்டும் என்று  கோரிக்கை விடுத்து இருந்தோம். இதுபோன்ற சம்பவங்கள் பாளையம் திமுக ஆட்சியில் அடிக்கடி நடப்பது என்பது தான் மிகவும் கவலைக்குரிய விஷயம். எங்கும் எதிலும் ஊழல் என்ற திராவிட மாடல் ஆட்சியிலே மன உளைச்சலுக்கு ஆளாகி மக்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் காட்சி தமிழகத்தில் வழக்கமாகிவிட்டது.

Central reward for dividing .. Shame on the state for snatching and eating is Ugly .. Annamalai.

2021 ஜூலை மாதம் 18ஆம் தேதி வேலூர் மாவட்டத்தில் ஆலங்காயம் பஞ்சாயத்து யூனியனில் ஊராட்சி மன்ற தலைவர் அதிக கமிஷன் கேட்டு திமுக கவுன்சிலர் கொடுத்த அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சிகரமான சம்பவம் இதே திமுக ஆட்சியில் நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் திமுக கவுன்சிலர் நடத்தும் சட்டத்திற்கு புறம்பான லாட்டரி ஏஜென்சியால் பாதிக்கப்பட்ட நூல் வியாபாரி கிட்டத்தட்ட 62 லட்சம் ரூபாயை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறிப்பாக மத்திய அரசு ஏழைகள் வீடு கட்டுவதற்காக வழங்கிய ஆவாஸ் யோஜனா திட்டத்தில் தான் அதிகப்படியான ஊழல்கள் நடந்து கொண்டிருக்கிறது. மே 13-2022 விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வெறும் 10  பேர் மட்டுமே 70 சதவீத பணிகளை முடித்து இருப்பதாகவும், இன்னும் 29 பேர் வீடு கட்டும் பணி அளவிலே 40 சதவீதத்தை தாண்டவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். நான்கு நபர்கள் தவறான போலி முகவரி கொடுத்து கடன் தொகையை தவணை பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 23 2011 கடலூர் மாவட்டத்தை பொருத்தவரையில் தகுதியான ஏழை பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வழங்கப்படும் கடன் அனுமதியில் திமுக உறுப்பினர்களுக்கு கடன் வழங்கப்பட்டு இருப்பதாகவும் அப்பாவி பொதுமக்கள் சிரமப்படுவதாக ஒரு ஏழை கூலி வாங்கும் பெண்மணி விரிவாக கடிதம் எழுதி இருக்கிறார். 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இலவச கழிப்பறை கட்டும் திட்டத்தில் கட்டப்பட்ட பகுதிகளை இலவச வீடு கட்டும் திட்டமாக மாற்றி கணக்கு காட்டி பணம் கையாடல் நடவடிக்கையில் ஈடுபட்ட 6 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இது போன்ற செய்திகளை என்னால் அடுக்கிக்கொண்டே போக முடியும். ஊழலுக்கும் லஞ்சத்துக்கு எந்த குறைவும் இல்லாமல் பணத்துக்காக காரியங்கள் பரிமாறப்படுகிறது. அப்பாவி பொதுமக்கள் உயிர் அநியாயமாகப் பறிபோகிறது. சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் 25 ஆண்டுகளாக கூடியிருந்த மக்கள் திடீரென வெளியேற்றப் படுகிறார்கள். ஆனால் அந்த வீடுகளுக்கு அருகில் தனியார் கட்டிடம் உயர்ந்து நிற்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் அதிரடியாக காலி செய்யப்படுகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கண்ணையன் என்பவர் தீக்குளித்து மரணம் அடைந்துள்ளார்.

Central reward for dividing .. Shame on the state for snatching and eating is Ugly .. Annamalai.

இது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகள் செய்வதற்காகவா மாநிலத்தில் ஒரு ஆட்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மத்திய அரசில் மக்களுக்காக வழங்கும் கோடிக்கணக்கான ரூபாய்களை மக்களுக்காகவும் மக்கள் நலத் திட்டங்களுக்காக பிரித்துக் கொடுக்கும் பணியை கூட செய்யமுடியாத அரசு என்ன சிறந்த அரசு. மத்திய அரசின் திட்டங்களை தன் சொந்த மாநில மக்களுக்கு கொடுப்பதற்கு கூடவா தன்னைத்தானே நம்பர் 1 என்று கூறிக்கொள்ளும் ஒரு முதலமைச்சர், கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன் என்ற திராவிட மாடலை தொடரவேண்டும்

மாநில அரசின் இது போன்ற நிர்வாக திறமையற்ற நடவடிக்கைகளை எல்லாம் மத்திய அரசு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது. மிக விரைவில் இதுபோன்ற தவறுகளை எல்லாம் மேலும் நடைபெறாமல் தடுத்து வலிமையான முன்னுதாரணம் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஊழலையும் லஞ்சத்தையும் எதிர்த்து அதனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரண உதவியும் மாநில அரசு பணியும் உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios