இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் அதை எதிர்கொள்ள செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும்  பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு தீவிரமான ஆய்வு செய்து வருகிறது.   இந்த குழு,  எவ்வளவு பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது இன்னும் எவ்வளவு பேர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்பது  குறித்து ஆராய்ந்து அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ்  உலகம் முழுவதும் வேகமாக பரவி உள்ளது . 

 சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்,  அமெரிக்கா இத்தாலி பிரான்ஸ் ஸ்பெயின் ஈரான் போன்ற நாடுகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன .   இந்நிலையில் தற்போது அந்த வைரஸ் இந்தியாவையும் வேகமாக தாக்கி வருகிறது ,  இந்நிலையில் இந்தியாவில்  இதுவரை  1,567 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் .  இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில் மேலும் பவர் வைரஸ் அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர் .  இந்நிலையில் இந்தியாவில் அந்த வைரஸ் மெல்ல மெல்ல வேகமெடுக்க தொடங்கியுள்ளது . இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல்  திடீரென அதிகரித்து வருவதால் , வைரஸ்  தாக்கம் மற்றும் அதன் பாதிப்பு குறித்து  ஆராய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது ,.

அதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா,  உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் ,   தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட  பல முக்கிய உறுப்பினர்களை கொண்ட அமைச்சர் குழு இந்த ஆய்வை நடத்தி வருகிறது .  இதில் 21 நாட்கள் நடைபெறஉள்ள ஊரடங்கு ,  மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பலன்கள் , பாதிப்புகள்,   மற்றும் சுகாதார பொருட்கள்  விநியோக முறை ,  பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும்  தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு  பிரச்சினைகள் குறித்து இந்தக் குழு ஆலோசித்து அதை எதிர்காளத்தில் தவிர்ப்பது, என்பது குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

திடீரென வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் எதிர்காலத்தில் அதை எதிர் கொள்ளவும் ,  ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் பொழுதும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும் , வைரசால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு  புதிய மருந்து மாத்திரைகள் தடையின்றி  கிடைக்க செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் அவர்கள் ஆலோசித்து வருவதாக மத்தியரசின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.