ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்... டி.ஆர்.பாலு வலியுறுத்தல்!!
ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.
ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார். ஆன்லைன் ரம்மி தடை மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட்ட நிலையில் அதனை ஆளுநர் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். இதற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது தொடர்பாக மக்களவையில் விவாதிக்கக்கோரி திமுக சார்பில் கவன ஈர்ப்பு நோடீஸ் அளிக்கப்பட்டது. இதனை திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அளித்தார்.
இதையும் படிங்க: அண்ணாமலை தலைவரான பின் மூத்த நிர்வாகிகளுக்கு மரியாதையே இல்லை... முன்னாள் பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு!!
அதில், அதில், ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழ்நாட்டில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், உயிரிழப்புகளை தடுக்க ஆன்லைன் சூதாட்டத்தை சட்டரீதியாக தடை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். பின்னர் மக்களவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆளுநரின் செயலை ஒன்றிய அரசு கண்டும் காணாததுபோல் இருக்கிறது.
இதையும் படிங்க: மனிதவெடிகுண்டாக அதிமுக தொண்டர்கள் மாறுவார்கள்..! ஸ்டாலினுக்கு எதிரான போராட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா செல்லாது என்று கூற ஆளுநருக்கு உரிமை இல்லை. மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டிய ஒன்றிய அரசு அலட்சியமாகச் செயல்பட்டு வருவது கண்டனத்துக்குரியது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை 4 மாதம் கிடப்பில் வைத்துவிட்டு ஆளுநர் திருப்பி அனுப்பியது சரியல்ல. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை 142 நாட்கள் கிடப்பில் வைத்துவிட்டு ஆளுநர் திருப்பி அனுப்பியது சரியல்ல. ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.