தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்த மத்திய அரசு!ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி அசத்திய மத்திய அமைச்சர்

தமிழ்நாட்டில், ஊரகப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகம் தேசிய சராசரி அளவைவிட உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டி, மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார். 

Central Government letter to Chief Minister expressing appreciation for power project activities of Tamil Nadu Government

முதலமைச்சருக்கு மத்திய அரசு கடிதம்

தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் தேசிய சராசரியை விட கூடுதலாக வழங்கியிருப்பதற்கு மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் தமிழக முதலமைச்சரை பாராட்டி கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில், ஊரகப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகம் தேசிய சராசரி அளவைவிட கூடுதலாக வழங்கப்படுவதைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டு தெரிவித்து, தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலினுக்கு,  ஒன்றிய எரிசக்தித் துறை அமைச்சர்  ஆர்.கே சிங் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.  11-5-2023 அன்று எழுதியுள்ள கடிதத்தில், ஊரகப் பகுதிகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகம் தேசிய அளவில் 2018-2019 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 20 மணி நேரம் 70 நிமிடங்களாக வழங்கப்பட்டு வந்த நிலையில்,

ஓபிஎஸ் பற்றி பேச உனக்கு தகுதியே இல்லை.. அவரு இல்லைனா உன் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாய் இருக்கும்! வைத்தியலிங்கம்

Central Government letter to Chief Minister expressing appreciation for power project activities of Tamil Nadu Government

தமிழக திட்டங்களுக்கு ஒத்துழைப்பு

2021-2022 ஆம் ஆண்டில், அது நாளொன்றுக்கு 20 மணி நேரம் 53 நிமிடங்களாக இருப்பதாகவும் இந்த நிலையில், தமிழ்நாட்டில் 2018-2019 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 20 மணி நேரம் 77 நிமிடங்களாக ஊரகப் பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மின் விநியோகம், 2021-2022 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 22 மணி நேரம் 15 நிமிடங்களாக உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டி, தனது பாராட்டினைத் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில், மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட ஏதுவாக, 24 மணி நேரமும் மின் விநியோகத்தினை வழங்கிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒன்றிய அரசு உதவிடும் என்றும்  ஒன்றிய எரிசக்தித் துறை அமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. 

இதையும் படியுங்கள்

செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! வேலைக்கு பணம் வாங்கிய விவகாரத்தில் நீதிபதி அதிரடி உத்தரவு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios