Asianet News TamilAsianet News Tamil

மீனவர்களுக்கு மட்டும் தடை நீங்கியது..!! மீன்களை பிடிக்க, விற்க உள்துறை அமைச்சகம் அனுமதி..!!

 திடீர் ஊரடங்கு உத்தரவால் இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர் .  லட்சக்கணக்கானோர் அன்றாட உணவு தேவைக்கு அல்லல்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் ,

central external afire ministry canceled 144 for fisher man
Author
Chennai, First Published Apr 11, 2020, 1:29 PM IST

இந்தியாவில் மீனவர்கள் கடலுக்குள் செல்லவும் அவர்கள் மீன்களை விறபனை செய்யவும்  உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது ,   ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்துவரும் நிலையில் மீனவர்களுக்கு  விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது . கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது ,  இதுவரையில் 7,447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,  உயிர்களின் எண்ணிக்கை 239 ஆக உயர்ந்துள்ளது ,  முன்னதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மத்திய அரசு தேசிய ஊரடங்கு உத்தரவை அறிவித்தது ,  ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு நடைமுறையில்  இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது . 

central external afire ministry canceled 144 for fisher man

 திடீர் ஊரடங்கு உத்தரவால் இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர் .  லட்சக்கணக்கானோர் அன்றாட உணவு தேவைக்கு அல்லல்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் ,  இந்நிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமெடுக்க தொடங்கியுள்ள நிலையில் மேலும் ஊரடங்கை  நீட்டிக்க வேண்டும் என மருத்துவர்கள் மற்றும்  மாநில முதலமைச்சர்கள் பிரதமருக்கு வலியுறுத்தியுள்ளனர் ,  இந்நிலையில் மேலும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என தகவல் வெளியாகி வருகின்றன ,  இந்நிலையில் கடல் சார் தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் மிகுந்த வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளதால்   தற்போது ஊரடங்களில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது .

central external afire ministry canceled 144 for fisher man 

இது குறித்து  தெரிவித்துள்ள உள்துறை அமைச்சகம் ,  மீன்பிடிப்பு மற்றும் மீன் வளர்ப்பு தொழில் சார்ந்த நிறுவனங்களுக்கு ஊரடங்கில்  இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது எனவே மீனவர்கள் கடலுக்குள் செல்லவும் மீன்களை விற்பனை செய்யவும் அனுமதிக்கப்படுகின்றனர் என  அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது .   அதுமட்டுமின்றி மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலில்  ஈடுபடுவோருக்கு மத்திய அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி உள்ளது ,  அதாவது இந்த தடை உத்தரவு காலத்தில் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் போதிய சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன்  பணிமனைகளில் போதிய சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ,  இதை அந்தந்த மீனவ அமைப்புகள் கண்காணிக்க வேண்டும் என்பதுடன் ,  மாவட்ட நிர்வாகங்கள் அதை உறுதி செய்ய வேண்டும் எனவும்  உத்தரவிட்டுள்ளது .
 

Follow Us:
Download App:
  • android
  • ios