திமுக- காங்கிரஸ் கூட்டணி வெற்றி கூட்டணி அல்ல அது வெத்துக் கூட்டணி என அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா பதிலடி கொடுத்துள்ளது. எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி கூறியதை மேற்கோள் காட்டி நமது அம்மா இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளது. அந்ந நாளேட்டில் கூறியிருப்பதாவது:

அதிமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றிக் கூட்டணி என்பதற்கு பதிலாக வைத்து கூட்டணி என்று சொல்லியிருக்கலாம், பன்னெடுங்காலமாக ஊழலையும் தமிழின துரோகத்தையும் மையமாக வைத்துக்கொண்டு திமுக காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் தமிழகத்திற்கு வித்திட்ட துரோகங்கள் புரிந்த பாவங்கள் எண்ணிலடங்காதவை. 

 

காவேரி  கன்னடர்கு, கச்சத்தீவு சிங்களர்க்கு, முல்லைப் பெரியாறு கேரளர்களுக்கு, வாய்க்கால் மட்டுமே தமிழர்களுக்கு என்று இத்தாலி காங்கிரஸ் தமிழருக்கு இழைத்த  துரோகங்களுக்கு எல்லாம் மத்தாளம் வாசித்த பாவத்தை புரிந்தது திமுக. அதுமட்டுமல்லாமல் தமிழர் தம் பண்பாட்டு பெருமையான ஜல்லிக்கட்டு உரிமையை பறித்து 9 வருடங்கள் வாடிவாசல்களை மூடவைத்த சண்டாளர்கள் இவர்கள். பொன் விளையும் படுக்கை பூமியை புல்லும் முளைக்காத பாலைவனமாக்க மீத்தேனுக்கும், கெயிலிருக்கும் ஒப்பந்தம் போட்ட சாத்தான்களும் இவர்களே. நீட் தொடங்கி ஜிஎஸ்டி, உணவு பாதுகாப்பு மசோதா என மாநிலங்களின் உரிமை பறிப்புக்கு வித்திட்ட காங்கிரசுக்கு முட்டு கொடுத்தது திமுக தான். 

இப்படியாக தமிழகத்திற்கும், தமிழ் இனத்திற்கும் இருவரும் கைகோர்த்துக்கொண்டு புரிந்த பாவத்திற்கும் இழைத்த துரோகத்திற்கும் தக்க பதிலடியை தரப்போகிற தேர்தலாக 2021 நிச்சயமாய் அமையும். வரப்போகும் சட்டமன்ற பொதுத் தேர்தலோடு இத்துப் போன திமுக-காங்கிரஸ் இன துரோக கூட்டணி மொத்தமாக முடிந்து போகும் என்பது சத்தியம். அதனால் கே.எஸ் அழகிரி இதனை இத்துப்போன கூட்டணி என்று கூறியிருக்கலாம், இல்லையெனில் இந்த தேர்தலோடு முடிந்து போகும் கூட்டணி என்று கூட சொல்லி இருக்கலாம் என குத்திட்டு பகுதியில் விமர்சிக்கப்பட்டுள்ளது.