காவேரி மருத்துவமனையில் மரணமடைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் 8.30 மணி முதல் அதிகாலை 1 மணி வரை கோபாலபுரத்திலும், பின்னர் அதிகாலை 1 மணி முதல் 4 மணி வரை சிஐடி நகர் இல்லத்திலும் அதன் பின்னர் காலை 4 மணி முதல் ராஜாஜி ஹாலிலும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் தற்போது, ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் உடலுக்கு, பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், மற்றும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

அந்த வகையில், ரஜினிகாந்த், அஜித், சூர்யா, தனுஷ், விவேக், உள்ளிட்ட நடிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பிரபலங்கள் அஞ்சலி செலுத்திய புகைப்படம் இதோ...