தினகரனின்  நண்பரான மல்லிகார்ஜூனாவிடம் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணை நிறைவடைந்துள்ளது.

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் அளிக்கப்பட்ட விவகாரத்தில் டிடிவி தினகரனோடு சேர்த்து அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவையும் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். வழக்கு விசாரணைக்காக இருவரையும் சென்னைக்கு இன்று அழைத்து வரப்பட்டனர். 

பெசன்ட் நகரில் உள்ள ராஜாஜி பவனில் முதலில் டிடிவியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி முடித்தனர். அதனைத் தொடர்ந்து அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இதற்கிடையே ராஜாஜி பவனிலேயே மல்லிகார்ஜுனாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 

சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இவ்விசாரணையில் பல முக்கியத் தகவல்களை அதிகாரிகளிடம் மல்லிகார்ஜூனா தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.