சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராலிமாறு சம்மன் அனுப்பு உள்ளனர். சென்னை, குரோம்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோல் தொழிற்சாலை நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தை அபகரித்ததாக ஜெகத்ரட்ச்கன் மீது புகார் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவருக்கு சிபிசிஐடி காவல்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்.பி.,யாக வெற்றி பெற்ற ஜெகத்ரட்சகன் பெரும் கோடீஸ்வரர். ஏற்கெனவே எதிர்கட்சிகள் மீது ஆளும் கட்சியினர் வழக்கு மேல் வழக்குகள் போட்டு வரும் நிலையில் ஜெகத்ரட்சன் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது திமுக நிர்வாகிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.