காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், காவிரியில் தமிழகம் இழந்த உரிமையை மீட்கவும் திமுக செய்ல தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 7 ஆம் தேதி திருச்சி முக்கொம்பில் இருந்து காவிரி உரிமை மீட்புப் பயணத்தைத் தொடங்குகிறார்.

காவிரி நதிநீர் பிரச்சனையில் இறுதித் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் 6 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வரரியம் அமைக்க வேண்டும்என எத்தரவிட்டது.ஆனால் மத்திய அரசு இது வரை அமைக்கவில்லை. இதனைக்கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நாளை திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. இதனிடையே வரும் 7 ஆம் தேதி திருச்சி முக்கொம்பில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி காவிரி உரிமை மீட்புப்பயணம் தொடங்க உள்ளதாக திமுக செய்ல தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த காவிரி உரிமை மீட்பு பயணத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்கின்றன.

இந்த பயண திட்டம் குறித்து ஆலோசிக்க நாளை மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.