காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மதியி அரசு நடத்த உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை செயலாளர், பொதுப்பணி செயலாளர் ஆகியோர் பங்கேற்பார்கள் என்றும், இப்பிரச்சனையில் தமிழப அரசின் உரிமையை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டேர்ம என்றும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

காவிரி விவகாரம் தொடர்பாக   முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த மாதம் 22-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.  திமுக, மதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு ஒருமித்த குரல் கொடுத்தனர்.

இந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்பட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  காவிரி விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பிரதமரிடம் நேரில் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது.

ஆனால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து மத்திய நீர்பாசன அமைச்சரை சந்திக்குமாறு கூறப்பட்டு இருந்தது. மேலும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்

இந்த நிலையில், காவிரி விவகாரத்தில் ஆலோசனை நடத்த வரும்படி தமிழ்நாடு மற்றும் கர்நாடகா உள்பட  4 மாநில  அரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து உள்ளது.

இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது உச்சநீ/தமன்ற  உத்தரவின்படி 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.

காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் ஆலோசனையில் தலைமை செயலாளர், பொதுப்பணி செயலாளர் ஆகியோர் பங்கேற்பார்கள் என ஜெயகுமார் தெரிவித்தார்.   காவிரி விவகாரத்தை விவகாரத்தைப் பொறுத்தவரை, தமிழக அரசு , மாநில உரிமைகளை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்காது என்று தெரிவித்தார்.