தொடர்ந்து கனமழை பெய்யும் பட்சத்தில் அணைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என்பதால்,அணைகளில் இருந்து தண்ணீரை வேகமாக வெளியேற்றியே ஆகவேண்டும் என்ற நிலை கர்நாடகத்திற்கு உருவாகியுள்ளது, கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் வேகமாக தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் நேற்று மாலை தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது, கபினி ஆணையிலிருந்து விநாடிக்கு  1,00,000 கன அடி தண்ணீரும், கபிலா அணையின் கிளை நதிகளான தாரகா அணையிலுந்து 25,000 கன அடி தண்ணீரும் தமிழகத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறது 

இதனால் தரும்புரி மாவட்டம் ஒக்கேனக்கல் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது,இதனால் ஒக்கேனக்கல் அருவியில் பொதுமக்கள் குளிக்கவும் , பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மேட்டூர் அணையின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது, 

கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறும் படியும் அதிகாரிகள் அறிவுருத்திவருகின்றனர். காவிரி ஆற்றில் தற்போதுவரை விநாடிக்கு 80,000 ஆயிரம் கன அடி நீர் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது, இதன் அளவு மேலும் படிப்படியாக அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது.தண்ணீருக்காக கர்நாடகாவிடன் போராடி வந்த நிலையில் தற்போது கேட்காமலேயே கர்நாடகம் தண்ணீர் திறந்துள்ளதால், தமிழகத்தில் மழை பெய்தாலும் பெய்யவில்லை என்றாலும் தரவேண்டியத ஆண்டவன் க்கரைக்டா தருவான் என்று தமிழக மக்கள் பேசிவருகின்றனர்.