Asianet News TamilAsianet News Tamil

சென்னை ஐஐடியில் சாதி பாகுபாடு... அதிர வைக்கும் பேராசியரின் வாக்குமூலம்..!

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பேராசிரியர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணைய உறுப்பினர்களை உள்ளடக்கிய விசாரணை அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Caste discrimination in Chennai IIT ... shocking confession of a professor ..!
Author
Tamil Nadu, First Published Jul 1, 2021, 5:49 PM IST

சென்னை ஐ.ஐ.டி-யில் சாதி ரீதியான பாகுபாடு காரணமாக பணியிலிருந்து வெளியேறுவதாக மானுடவியல் மற்றும் சமூகவியல் உதவிப் பேராசிரியராக பணியாற்றிய விபின் ஐஐடி நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் மூலம் ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார்.

Caste discrimination in Chennai IIT ... shocking confession of a professor ..!

 கடந்த 2019ம் ஆண்டு சென்னை ஐஐடி-யில் மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போது, ஐஐடியில் ஜாதி மற்றும் மத பாகுபாடு நிலவுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.Caste discrimination in Chennai IIT ... shocking confession of a professor ..!

இந்நிலையில், சாதி ரீதியான பாகுபாட்டின் காரணமாக ஐஐடியில் இருந்து வெளியேறுவதாக உதவிப்பேராசிரியர் விபின் புதியதாத் வீட்டில் என்பவர் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார். ஐஐடி நிர்வாகத்திற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பேராசிரியர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணைய உறுப்பினர்களை உள்ளடக்கிய விசாரணை அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள ஐஐடி நிர்வாகம், ‘’சாதி பாகுபாடு இருப்பதாக உதவிப் பேராசிரியர் மின்னஞ்சல் மூலம் புகார் அளித்தது சரியான நடைமுறை அல்ல; சரியான நடைமுறைகளின் படி தெரிவித்தால் விசாரிக்கப்படும்’’ எனத் தெரிவித்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios