ஆரம்பத்தில் சுகேஷை நம்பினாலும் பின்னாளில் அவரது நடவடிக்கைகளில் நம்பிக்கை இல்லாததால் தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்கிறார் அந்த கோடீஸ்வரரின் மனைவி.   

சிறையில் இருந்து கொண்டே மிகப்பெரிய கோடீஸ்வரரின் மனைவியிடம் நூற்றுக்கணக்கான கோடி பணத்தைவ் பேரம் பேசி வாங்கியவர் சுகேஷ். அங்கிருந்தே பணம் கொடுக்கல், வாங்கல் பற்றி பல மணிநேரம் தொலைபேசியில் பேசும் அளவுக்கு சிறையிலும் செல்வாக்கை வளத்தவர். நாட்டின் உள்துறைச் செயலாளர் உட்பட மூத்த அரசு அதிகாரிகளுடன் தனக்கு நெருக்கம் இருப்பதாக பலரையும் நம்ப வைத்தவர். அந்த கோடீஸ்வரரின் மனைவி உள்துறை அமைச்சரை சந்திக்க வேண்டும் என சுகேஷிடம் கேட்கிறார். அதற்கு சுகேஷ், ‘’அந்த விஷயத்திற்கு ஒத்துழைத்தால்" உங்களை அவருடன் சரியான நேரத்தில் சந்திக்க வைக்கிறேன் என ஆப்சன் கொடுக்கிறார்.

ஆரம்பத்தில் சுகேஷை நம்பினாலும் பின்னாளில் அவரது நடவடிக்கைகளில் நம்பிக்கை இல்லாததால் தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்கிறார் அந்த கோடீஸ்வரரின் மனைவி.

ஒரு ஆள்மாறாட்டம் செய்பவருடன்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். தான் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து மோசடிக்கு ஆளாகி இருக்கிறோம் என்பதை பின்னால் உறுதி படுத்திக் கொள்கிறார் அந்த கோடீஸ்வரரின் மனைவி. 

 ஜூலை மாதம் அமலாக்க இயக்குநரகத்தால் எச்சரிக்கை செய்யப்பட்ட பிறகு, அந்த பெண் சுகேஷிடம் பேசிய விவரங்களை பொது வெளியில் அம்பலப்படுத்தி விட்டார். 

பின்னர் அவற்றை அமலாக்க இயக்குனரகத்திடம் ஒப்படைக்கிறார். 200 கோடி வரை மிரட்டி பணம் பறித்ததாகவும், ஏமாற்றியதாகவும் டெல்லி காவல்துறையில் வழக்குப் பதிவு செய்ய்யப்பட்டது. 

திருப்பங்கள் நிறைந்த கதை இது. இதில் பெரிய விஷயம் என்னவென்றால், அந்த பெண்ணை அழைத்த சுகேஷ் சிறையிலிருந்தே இப்படி தன்னை ஏமாற்றியுள்ளான் என்பது தெரிய வந்தது. சுகேஷ் ஒரு செல்போனில் மென்பொருளைப் பயன்படுத்தியுள்ளார். அதன் மூலம் அரசாங்க உயர் அதிகாரிகளின் தொலைபேசி எண்களை காப்பி செய்து 'ஸ்பூஃப்' செய்து ஏமாற்றும் செயலியை பயன்படுத்தி ஏமாற்றிய விபரம் தெரிய வருகிறது.


சுகேஷ் சந்திரசேகர் ஆள்மாறாட்டம் செய்த எந்த அரசு அதிகாரியும் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை. 200 கோடியில் எந்தப் பகுதியையும் அரசு அதிகாரிக்கு வழங்காததால், அதில் 'லஞ்சம்' இல்லை.

200 கோடி தரும்படி மிரட்டியதாக சுகேஷ் சந்திரசேகர் மீது கோடீஸ்வரரின் மனைவியான அதிதி சிங் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

ஜூன் 2020 ல், அதிதி சிங் சுகேஷ் கொடுத்த எண்களை தொடர்பு கொண்டு மூத்த அரசாங்க அதிகாரிகள் என நினைத்து பலருடன் உரையாடத் தொடங்கியுள்ளார். உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரியான அஜய் பல்லா, சட்டத்துறை செயலாளராக அனூப் குமார், மேலும் அபினவ் என்ற இளநிலை சட்ட அமைச்சக அதிகாரி உள்ளிட்ட பலரது பெயர்களை இந்த விவகாரத்தில் பயன்படுத்தி உள்ளார் சுகேஷ்.

சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அதிதி சிங்குடன் தொடர்புடைய பல்வேறு வழக்குகளுக்காக அவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டன. அவர்களின் உரையாடல்கள் 11 மாதங்களில் வெளியாகியது. அதிதி சிங்கால், அவரது சகோதரி அருந்ததி கண்ணாவும், பணம் செலுத்துவதற்காக அவரது குடும்பத்தினரால் சொத்துக்கள் எப்படி வலைக்கப்பட்டன என்கிற விவகாரம் வெளியானது.

அதில்"இப்போது நீங்கள் என் மீது இவ்வளவு அழுத்தம் கொடுத்தால் என்னால் வேலை செய்ய முடியாது, இதை நான் உங்களிடம் முன்பே சொல்லியிருக்கிறேன். இதற்கு முன்பே இந்த விவகாரம் முடிந்துவிட்டது. அந்தப்பணத்தை கட்சி நிதிக்கு கொடுத்து விட்டேன் என்கிறார் சுகேஷ். அதற்குப் அந்தப்பெண் ‘’ நன்கொடையை நீங்கள் எதற்காகப் பயன்படுத்துகிறீர்கள்? நீங்கள் தேர்தலுக்குப் பயன்படுத்துகிறீர்களா அல்லது கங்கையில் போடப் பயன்படுத்துகிறீர்களா அல்லது மரம் நடுவதற்குப் பயன்படுத்துகிறீர்களா? உண்மையை சொன்னால் நாங்கள் அந்தப்பணத்தை கேட்க மாட்டோம்’’ எனக்கூறுகிறார். 

ள் நிச்சயமாக சரியாக இருப்பதாக உறுதியளித்து, அவனுடன் ஒரு சந்திப்பைத் தேடுகிறாள். உள்துறை அமைச்சருடனான சந்திப்பிலும் இது சரியான நேரத்தில் நடக்கும் என்று 'அஜய் பல்லா' கூறுகிறார்.

ஆகஸ்டில், சுகேஷ் சந்திரசேகர் தன்னிடம் இருந்து 30 தவணைகளில் ₹ 200 கோடி வாங்கியதாக அதிதி சிங் காவல்துறையில் புகார் அளித்ததார். அதில், "அனூப் குமார் (சட்டச் செயலாளர்)" மற்றும் "துணைச் செயலாளர் அபினவ்" ஆகியோர் பெயரைக்கூறி பல தவணைகளில் பணத்தை வசூலித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

"இவர்கள் என்னை பயமுறுத்துகிறார்கள், என்னை மிரட்டுகிறார்கள், எனவே மெதுவாக, நான் அவர்களுக்கு 200 கோடியைக் கொடுத்தேன், என் நகைகள், முதலீடுகள் மற்றும் பிற சொத்துகளைப் பயன்படுத்தினேன். அப்போதும், மிரட்டல் தொடர்ந்தது. அவர்கள் வெளிநாட்டில் படிக்கும் என் குழந்தைகளை சுட்டிக்காட்டி மதிப்பெண்களை சரிசெய்வதாக சொன்னார்கள். அவர்கள்," என்று அவர் தனது புகாரில் கூறியுள்ளார்.

டி.டி.வி.தினகரனுக்காக இரட்டை இலைச்சின்னத்தை பெற்றுத்தர பல 50 கோடி லஞ்சம் கொடுத்த புகாரும்ப் இந்த சுகேஷ் மீது உள்ளது.